Tap to Read ➤

நேரடியாக மோதிய அஜித்-விஜய் படங்கள்..அதிகம் வென்றது யார்?

அஜித் விஜய் படங்கள் 25 ஆண்டுகளாக வந்து பெருவெற்றியும், சில படங்கள் தோல்வியையும் தழுவியுள்ளன
Filmibeat Tamil
1996 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் கோயம்பத்தூர் மாப்பிள்ளையும் அஜித்தின் 8வது படமான வான்மதியும் வெளியானது. வான்மதி ஹிட் அடித்தது
அதே 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய்யின் பூவே உனக்காக படமும் அஜித்தின் கல்லூரி வாசல் படமும் வெளியானது. விக்ரமனின் வித்தியாசமான கதைக்களம் காரணமாக பூவே உனக்காக வெற்றி பெற்றது
1997 பொங்கல் அன்று அஜித் நடித்த நேசம், விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன் வெளியானது. இதில் விஜய் படம் ஹிட் அடித்தது.
1997 ஆண்டு டிசம்பரில் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு, விஜய் நடிப்பில் பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை வெளியானது. காதலுக்கு மரியாதை வித்தியாசமான காதல் கதை பெரு வெற்றி பெற்றது.
1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் நிலாவே வா படமும் அஜித் கவுரவ வேடத்தில் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமும் வந்தது. வித்தியாசமான கதை என்பதால் உன்னிடத்தில் என்னைகொடுத்தேன் ஹிட் அடித்தது.
1999 ஆம் ஆண்டு விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படமும் அஜித்தின் உன்னைத்தேடி படமும் 15 நாள் இடைவெளியில் வெளியானது. பாடல், காமெடி, வித்தியாசமான கதைக்களம் காரணமாக விஜய்க்கு இம்முறை வெற்றி கிடைத்தது
2000 ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் குஷி படமும், மே மாதத்தில் அஜித்தின் உன்னைத்கொடு என்னைத்தருவேன் படமும் வெளியானது. பாடல் நடனம் என அசத்திய குஷி படம் ஹிட் அடித்தது
2001 ஆம் ஆண்டு பொங்கல் அன்று அஜித்தின் தீனா, விஜய் சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் வெளியானது. பாடல், காமெடி காரணமாக ஃபிரண்ட்ஸ் ஹிட் அடித்தாலும் அஜித்தின் தினா பெரிதும் பேசப்பட்டது
2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பகவதி படமும் அஜித் நடிப்பில் வில்லன் படமும் வெளியானது. அஜித்தின் வில்லன் பெரு வெற்றி பெற்றது.
2003 ஆம் ஆண்டு விஜய் நடித்த திருமலை படமும் அஜித்தின் ஆஞ்சநேயா படமும் வெளியானது. இதில் ஆஞ்சநேயா பெரிய அளவில் ஓடவில்லை
2006 ஆம் ஆண்டு பொங்கல் அன்று விஜய் நடிப்பில் ஆதி படமும் அஜித் நடிப்பில் பரமசிவன் படமும் வெளியானது. இரண்டுமே பெரிதாக போகவில்லை
2007 ஆம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி அஜித் நடித்த ஆழ்வார் படமும் வெளியானது. இதில் ஆழ்வார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை
அதன் பின்னர் அஜித் விஜய் படங்கள் 7 ஆண்டுகள் நேரடியாக மோதவில்லை நீண்ட இடைவெளிக்கு பின் 2014 விஜய்யின் ஜில்லா படமும் அஜித்தின் வீரம் படமும் நேரரடியாக மோதின இதில் வீரம் படம் ஹிட் அடித்தது
பெரும்பாலும் நேரடி மோதலில் விஜய் படமே வென்றுள்ளது. அதன் பின் மீண்டும் 6 ஆண்டுகளுக்கு பின் வரும் 2023 பொங்கல் தினத்தில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேரடியாக மோதுகிறது