Tap to Read ➤

எஸ்.ஜானகி எனும் ஆளுமை...60 ஆண்டுகள் 4 தலைமுறைக்கு பாடியவர்

60 ஆண்டுகள் 4 மொழிகளில் முன்னணி பாடகியாக நான்கு தலைமுறைகளுக்கு பாடிய எஸ்.ஜானகி எனும் ஆளுமைக்கு இன்று பிறந்தநாள்.
60 ஆண்டுகள், நான்கு மொழிகளில் நான்கு தலைமுறைக்கு பாடிய எஸ்.ஜானகி
தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட ரசிகர்களுக்கு அவரது சொந்த மண்ணின் பெண்ணாக காதல், தாய்மை, தத்துவம் , தெய்வீகம் என பல பரிமாணங்களில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.ஜானகி.
1957 ஆம் ஆண்டு பின்னனி பாடகியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படத்தொடங்கிய ஜானகியின் சாம்ராஜ்ஜியம் 2000 ஆம் ஆண்டு வரை நீடித்தது.
அவரவர் மாநிலங்களில் தங்களுக்கு மட்டுமே ஜனகி பாடுகிறார் என்று எண்ணும் அளவுக்கு மொழி ஆளுமையும், உச்சரிப்பும் கொண்ட ஆழமான பாடகி எஸ்.ஜானகி. அவராக 2016 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்து ஒதுங்கினார்.
தற்போது 85 வயது ஆகும் ஜானகி உச்சத்தில் இளம் கதாநாயகிகளுக்காக இளம் குரலில் கலக்கியபோது அவரது வயது 50 வயதுக்கு மேல் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஜானகி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடிய கல்லூரி மாணவர் ஒருவருக்கு இரண்டாம் பரிசு அளிக்கப்பட சீஃப் கெஸ்ட் ஜானகி இரண்டாம் பரிசுப்பெற்ற மாணவரே முதல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி பரிசளித்தார் அந்த இளைஞர் பின் நாளில் மிகப்பெரிய பாடகரான எஸ்.பி.பி.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
எஸ். ஜானகியை பின்னனி பாடகியாக்கியது அவரது கணவர் ராம் பிரசாத். மேடையில் பாடிய அவரது திறமையைக் கண்டு சினிமாவுக்கு பின்னனி பாட வைத்தார். நட்பு காதலாக மாற ராம் பிரசாத்தை கரம் பிடித்தார். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார்.
எஸ்.ஜானகி பாடாத மொழில் இல்லை எனலாம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, பெங்காலி, உள்ளிட்ட 17 மொழிகளில் பாடியுள்ளார். அனைத்தையும் சேர்த்தால் 50,000 பாடல்கள் வரை பாடியுள்ளார்.
தமிழை விட மலையாள, கன்னடப்பட உலகமே ஜானகியை ஏற்றுக்கொண்டது. தமிழில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற ஆளுமைகள் இருந்த நேரம், அதிக பாடல்களை 60, 70 களில் ஜானகி பாடவில்லை.
70 கள் இறுதியில் ஜானகியின் ஆதிக்கம் தொடங்கியது. அதன் பின் அவராக ஒதுங்கும் வரை அவர்தான் ராஜ மாதாவாக இருந்தார். அன்னக்கிளியில் தொடங்கி 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை என ஆதிக்கம் தொடர்ந்தது.
கண்டசாலா, டி.எம்.எஸ், ராஜ்குமார், கிஷோர்குமார், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி என 1950 இறுதிகளில் உள்ள பாடகர்களுடன் பாடத்தொடங்கி 90 களில் வந்த ஜெயச்சந்திரன், மனோ உள்ளிட்ட பாடகர்கள் வரை பாடியுள்ளார்.
நான்கு மாநில தேசிய திரைப்பட விருதுகளையும், 5 மாநிலங்களின் 33 மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் பட்டத்தை தாமதமாக கொடுக்கப்பட்டதாக கூறி ஏற்க மறுத்துவிட்டார்.
தன் முன் மாணவனாக பாராட்டப்பட்ட எஸ்.பி.பி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கூட்டணி 1970 கள் இறுதியில் ஆரம்பித்து 1990 இறுதிவரை தொடர்ந்தது.
திரைப்பாடல்களில் எஸ்.ஜானகியின் குரல்வளம் தனித்துவமானது. மொழிக்கேற்ப பாடுவது, இளம்பெண்ணின் மயக்கும் குரல், குழந்தையின் குரல், வயதான பெண்களின் குரல்,ஆண்குரலில் பாடும் நிபுணத்துவம் பெற்றவர் ஜானகி.
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனாக்கள் படத்தில் இடம்பெற்ற அம்மா பூவினும் என்ற பாடலுடன் தனது திரையுலக பயணத்தை நிறைவு செய்வதாக அறிவித்தார். ஜானகி. கடைசியாக தமிழி வேலயில்லா பட்டதாரி படத்தில் அவர் பாடிய தாய் பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது.