Tap to Read ➤

சினிமாவை ஆயுதமாக்கிய அண்ணா..எம்ஜிஆரின் வழிகாட்டி

அரசியலில் வெல்ல திரைத்துறையை திறமையாக பயன்படுத்தியவர் அண்ணா. அவரது பிறந்தநாள் செப்.15
Filmibeat Tamil
தமிழக அரசியல் சுதந்திரத்திற்கு பின் தேர்தல் அரசியலாக மாறியது. அதை சினிமாவை வைத்து சாதகமாக்கி வெற்றி கண்டவர் அண்ணா எனலாம்.
திமுகவின் வெற்றிக்கு அதன் திராவிட இயக்க அரசியல் ஒரு பக்கம் என்றால் கலைத்துறையை பயன்படுத்தியது இன்னொரு வகை அரசியல் எனலாம்.
அண்ணாவின் இந்த நடைமுறை மூலம் இன்றுவரை திராவிடக்கட்சிகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கின்றன.
சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி பின்னர் 1944-ல் திராவிடர் கழகமாக மாறியது. அதன் நிறுவனர் பெரியார். பொதுச் செயலாளராக அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.
தி.க. தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் சமூக இயக்கமாக செயல்பட பெரியார் நினைத்தார். மற்றும் சில காரணங்களால் தி.க. 1949 ஆம் ஆண்டு பிளவுபட்டது. 1949 ஆம் ஆண்டு செப்.17 அன்று திமுக உதயமானது.
அதுமுதல் கலைத்துறையையை அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திமுக பிரச்சாரத்துக்காக கையில் எடுத்தனர். கலைத்துறை சினிமாவாக மாறும் முன் மேடை நாடகங்களை பயன் படுத்தினர்.
திமுகவை தமிழகத்தில் வளர்த்தெடுக்க வேண்டுமானால் இடதுசாரிகளுக்கு மாற்றாக இரண்டாம் பெரிய கட்சியாக திமுகவை கொண்டுவர ஒரே வழி கலைத்துறை என அண்ணா முடிவு செய்தார்.
திமுகவில் மேடை நாடகங்கள் மூலம் அண்ணா, கருணாநிதி,என்,எஸ். கிருஷ்ணன், கே,ஆர்.ராமசாமி உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தை கொண்டுச் சென்றனர்.
திரைத்துறையில் திமுகவை கொண்டுச் சென்றதில் அண்ணாவின் பங்கு மிகப்பெரியது. திமுக ஆரம்பித்த அதே ஆண்டில் அண்ணாவின் கதை வசனத்தில் வேலைக்காரி, என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் வெளியான நல்லதம்பி படம் வெளியாகி சக்கைபோடு போட்டது.
அரசர் காலத்து படமானாலும் அதிலும் புரட்சிகர கருத்தை சொல்லி கால் பதித்தார் கருணாநிதி. அண்ணாவின் எழுத்தாற்றல் கலைப்பயண வழியை கருணாநிதியும் கையிலெடுத்தார்.
அண்ணாவின் வழியை பின்பற்றிய கருணாநிதி திரைக்கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தின் பெருவெற்றி திமுகவுக்கு மக்களிடையே பெரிய ஆதரவைத் தேடித் தந்தது.
இப்படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஏற்கெனவே திமுகவின் மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றிருந்தார். இதன் பின்னர் திமுகவில் இணைந்தார் சிவாஜி கணேசன்.
தன் வசன உச்சரிப்பால் புகழ் பெற்றிருந்த எஸ்.எஸ்.ஆரும், எஸ்.எஸ்.கேவும், கே.ஆர்.ராமசாமி,டி.வி. நாராயணயசாமி உள்ளிட்டோரும் திமுகவில் இருந்தனர்.
அண்ணாவின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் அனுதாபி எம்ஜிஆர் அண்ணாவின் பணத்தோட்டம் நாவலை படித்து அண்ணா மீது மிகுந்த அபிமானம் கொண்டார்.
ஏற்கெனவே கருணாநிதியுடனான நட்பு எம்ஜிஆரை திராவிட இயக்க கொள்கை பக்கம் திருப்பி இருந்தது. 1952 ஆம் ஆண்டு பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் திமுகவுக்கு வருவதை உறுதிப்படுத்தினார்.
அண்ணா திரையுலகின் இளம் கலைஞர்களை தன் வசப்படுத்தியதில் அது திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. கண்ணதாசன் உள்ளிட்ட மிகப்பெரிய கவிஞர்கள் அண்ணாவால் திமுகவுக்குள் ஈர்க்கப்பட்டனர்.
எம்ஜிஆர் தனது படங்களில் அதிகம் திமுக கொள்கைகளை பேசினார், சின்னம், கருப்பு சிவப்பு வண்ணத்தை உடையாக அணிவது என திரைப்படம் மூலம் கொண்டுச் சென்றார்.
அண்ணா, திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திராவிட இயக்க கொள்கைகளை கொண்டுச் செல்லும் கருவியாக கலைத்துறையை பயன்படுத்தினார்.
கலைத்துறையை, திரைத்துறை கலைஞர்களை அண்ணா பயன்படுத்தியது, 1967 ல் திமுகவை ஆட்சியில் அமர்த்தும் அளவுக்கு சென்றது.
அண்ணாவின் மறைவுக்கு பின் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதும், அண்ணாவின் படத்தை கட்சிக்கொடியில் வைத்தார். பாடல்களில் அண்ணாவின் படத்தை காட்டுவது, அண்ணாப்பற்றி பேசுவது என எம்ஜிஆர் தன்னை வளர்த்துக் கொண்டார்.
அண்ணாவின் இந்த தனித்துவம் இன்றும் திராவிட இயக்க கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் தொடர்வதற்கு வழிவகுக்கிறது என்றால் அது மிகையல்ல.