Tap to Read ➤

கவர்ச்சி புயல் அனுஷ்கா..17 ஆண்டு சினிமா வாழ்க்கை

கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் 17 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்து நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 41 வது பிறந்தநாள். அனுஷ்காவின் திரையுலக பயணத்தை பார்போம்.
Filmibeat Tamil
அனுஷ்கா ஷெட்டி 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, கர்நாடக மாநிலம் மங்களூரில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர். தாய் ஃபிரபுல்லா, இல்லத்தரசி
அனுஷ்கா பள்ளி படிப்பை முடித்தவுடன் முறைப்படி யோகா கற்றார். மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆனார்
அதன் பின்னர் யோகா டீச்சர் ஆக வேலை செய்தார். அதுமட்டுமல்ல, அதற்கு முன்பு ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றியதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்
தனது யோகா மாஸ்டர் மனைவி மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க 2005-ல் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
சாதாரணமான நடிகையாக இருந்த அனுஷ்காவை கோலிவுட் ஹாலிவுட் உலகம் திரும்பி பார்க்க வைத்த படம் அருந்ததி. 2009 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வசூல் செய்தது. சுமார் 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 73 கோடிகளை வசூலித்தது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. அருந்ததி, சிங்கம் 3 பாகம், பாஹுபலி, வேட்டைக்காரன், வானம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, தெய்வத்திருமகள், என்னை அறிந்தால் என பல படங்கள் முக்கியமானவை.
நான் 17 ஆண்டுகளாக நடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றாக உழைத்தால்தான் சினிமா துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். அந்த நம்பிக்கையோடுதான் நான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்
எனக்கு அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும் இந்த கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பட்டியல் போட்டு பழக்கமில்லை. நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டேன்-அனுஷ்கா
நான் இத்தனை படங்களில் நடித்தாலும் அருந்ததி படம் தான் நம்பர் ஒன். எந்த நடிகையாக இருந்தாலும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவால்தான்- அனுஷ்கா
சினிமாவிற்காக ரிஸ்க் எடுக்க தயங்காத அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக சுமார் 18 கிலே உடல் எடையைக் கூட்டி நடித்தார். நடிப்புக்காக உடல் எடையை கூட்டிய நடிகை திரைத்துறையில் ஒருவர் கூட கிடையாது. நடிகை அனுஷ்கா ஒருவர்தான்iப்படி செய்த முதல் நடிகை
சினிமா நடிகையாக 17 ஆண்டுகள் காலம் கழித்துவிட்ட அனுஷ்கா தற்போது 41 வது பிறந்த நாளை நவ.7 அன்று கொண்டாடியுள்ளார். இன்னும் அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. விரைவில் திருமணம் செய்வேன் என அறிவித்துள்ளார்
சினிமா தாண்டி உதவும் மனப்பான்மை கொண்டவர் அனுஷ்கா, அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளிலும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்
2014-ம் வருடம், ஆந்திராவில் வீசிய “ஹூட் ஹூட்” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக தன்னுடைய திரைப்படக்குழுவினருடன் பல நிகழ்ச்சிகள் நடத்தி, கணிசமான நிதியை அரசிடம் ஒப்படைத்தார்
2015-ம் ஆம் ஆண்டு 37 –ல் உங்களில் யார் கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, அதில் தான் வெற்றி பெற்ற 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை, Teach for India எனும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார்
அனுஷ்காவின் முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தென்னிந்திய திரைப்படத்துறையில் வேறு யாருக்கும் இந்த அளவு முகநூல் ஆதராவாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது