Tap to Read ➤

Avatar-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு...கூடுதல் தகவல்கள்

உலகெங்கிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ‘ஹாலிவுட் ராஜமவுலி’ ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள, உயர் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ள அவதார்-2 படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் உள்ளே.
உலகின் பிரம்மாண்ட படங்களை எடுக்கும் ’ஹாலிவுட்டின் ராஜமவுலி’ ஜேம் கேமரூனின் அவதார் 2 பாகம் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பிரம்மாண்ட படைப்புகளை அளிக்கும் சில ஹாலிவுட் இயக்குநர்களில் ஜேம்ஸ் கேமரூன் முதன்மையானவர். டைட்டானிக் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி அசத்தியவர்.
1984 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் படம் மூலம் இந்திய ரசிகர்களிடம் அறிமுகமானார். 1991 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் 2 படத்தை நவீன தொழில் நுட்பம் மூலம் எடுத்து அசத்தினார்.
அடுத்து டைட்டானிக், 2009 ஆம் ஆண்டு விர்ச்சுவல் உலகம் பற்றி அறியாத காலத்தில் அதுபோன்ற கதையமைப்புக் கொண்ட அவதார் படத்தை எடுத்தார். 3 டியில் வெளிவந்த படம் உலகின் மிகப்பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
237 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், வேறு ஒரு உலகிற்குள் சென்று அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்க பேராசை கொண்ட ராணுவ தளபதியின் செயலை மனிதன் அங்குள்ள வதார்களுடன் சேர்ந்து முறியடிக்கும் படமாக எடுத்தார்.
காட்சிக்கு காட்சி 3டி தொழில் நுட்பத்தில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு திரைக்கதை, காட்சிகள் இருக்கும். அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கும் அவதார் படம் ஹாலிவுட் உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து 2.4 பில்லியன் டாலர் வசூலை அள்ளியது.
2020 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். காரணம் இந்தப்படம் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. 3டி காட்சிகளை கண்ணாடி இல்லாமல் பார்க்கலாம். இதனால் அவதார் 2 மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
இப்படமும் 300 மில்லியன் டாலருக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர அவதார்- 3 2024 ஆம் ஆண்டிலும், அவதார்- 4 2026 ஆம் ஆண்டிலும், அவதார்- 5 2028 ஆம் ஆண்டிலும் வெளிவர உள்ளன.
இந்தப்படத்தின் மற்றொரு சிறப்பு ‘அன்டர் வாட்டர் மோஷன் கேப்’ டெக்னாலஜி எனும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது ஹாலிவுட் உலகின் புதிய டெக்னாலஜி ஆகும்.
டிசம்பர் மாதம் 16-ந் தேதி உலகமெங்கும் 160 க்கும் மேற்பட்ட மொழிகளில் அவதார் 2 வெளியாகிறது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.