Tap to Read ➤

பீஸ்ட் படத்தின் 3 வது பாடல் வெளி வந்தது

விஜய்யின் பீஸ்ட் 3 வது பாடல் இன்று வெளியானது. குத்துப்பாடல் போல் இல்லாமல் தனிப்பாடலாக விஜய்யின் பெருமை பேசும் பாடலாக உள்ளதால் ரசிகர்கள் இதை எப்படி வரவேற்பார்கள் என்பது போகப்போக தெரியும்.
நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வர உள்ள படம் பீஸ்ட். வரும் 13 ஆம் தேதி பீஸ்ட் படம் வெளியாகிறது.
மாஸ்டர் பட வெற்றிக்குப்பின் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் வெளியாகிறது.
விஜய் படம் என்றாலே ஆட்டம், பாட்டுக்கு குறைவிருக்காது. வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் ரசிக்கப்பட்டது.
அதேபோல் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிகுத்து பாடல் இதுவரை உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து உலகம்முழுவதும் பலராலும் ரசிக்கப்படுகிறது.
அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் இசையமைக்க பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட செட்டில் விஜய், பூஜா ஹெக்டே ஆடும் ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜாலியோ ஜிம்கானா என்கிற இரண்டாவது பாடல் வெளியானது. இந்தப்பாடலும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
அதன் பின்னர் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் சீரியசாக ஷாப்பிங் மாலில் புகுந்த தீவிரவாதிகளுடன் விஜய் மோதும் காட்சிகள் இருந்தன.
இதனால் விஜய் படத்தின் கதை இதுதான் என முடிவு செய்த ரசிகர்கள், 2 அருமையான பாடல்களையும் வீணடிக்காமல் தகுந்த இடத்தில் வைக்க வேண்டும் என நெல்சனுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் 3 வது பாடல் இன்று மாலை வெளியானது இதில் விஜய் குறித்த தனிப்பாடலாக வந்துள்ளது. ஆடல் பாடலாக இல்லாமல் பின்னனியில் ஒலிக்கும் பாடலாக BGM ஆக உள்ளது.
பாடலின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கெனவே வெளியான ட்ரெய்லர் காட்சிகளே உள்ளன. மாண்டேஜ் சாங் போல் உள்ளது.
சில காட்சிகள் மட்டும் வித்தியாசமான கோணத்தில் விஜய் நிற்பதுபோல் உள்ளது.
விஜய்யின் பீஸ்ட் 3 வது சிங்கிளை எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என நெட்டிசன்கள் கூறுகின்றனர். முதல் பாடல் போல் வரவேற்பு பெறுமா பொறுத்திருந்து பார்ப்போம்.