Tap to Read ➤

பீஸ்ட் ட்ரெய்லர் வெளியானது

மிகவும் எதிர்பாrக்கப்பட்ட பீஸ்ட் ட்ரெய்லர் வெளியானது. ஷாப்பிங் மாலில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் வீரராக விஜய் சண்டை செய்து காப்பாற்றுவதுபோல் உள்ளது. அதிரடிக்கு பஞ்சமில்லை.
பெருத்த எதிர்பார்ப்புக்கிடையே பீஸ்ட் பட ட்ரெய்லர் வெளியானது.
முதல் காட்சியில் ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் சூழ்ந்து பிடித்துக்கொள்கிறார்கள்.
பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டுகிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சகம், அதிகாரிகள் கூட்டம் கூடி ஆலோசிக்கிறார்கள். உயரதிகாரியாக செல்வராகவன் வருகிறார்.
தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளுக்குள் ஹீரோ வீரராகவன் விஜய் இருக்கிறார்.
தீவிரவாதிகளுடன் சண்டைப்போட்டு அவர்களை கொல்கிறார்.
துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தீவிரவாதிகளை மோதி அழிக்கிறார்.
இடையில் உங்கள் அரசியலுக்கு நான் ஆளல்ல நான் அரசியவாதியல்ல வீரன் என்று வசனம் பேசுகிறார்.
பின்னர் அனைவரையும் மீட்கிறார். இடையில் ஹெல்மட் அணியாமல் விமானப்படை வீரராக குண்டு வீசி எதிரிகளை அழிக்கிறார்.