Tap to Read ➤

பீஸ்ட்...கேஜிஎஃப் 2 ...எது வெல்லும்

ஏப்.13 பீஸ்ட் படமும் ஏப்.14 கேஜிஎஃப்-2 படமும் வருகின்றன. இரண்டு மத யானைகள் போல் மோத உள்ளன. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வரும் 2 படங்கள் பீஸ்ட் , கேஜிஎஃப் 2
விஜய் நடிப்பில் மாஸ்டருக்குப்பின் வரும் படம், கொரோனா இல்லாமல் நேரடியாக தியேட்டர் ரிலீஸ் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேஜிஎஃப் படம் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கேஜிஎஃப் -2 அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பீஸ்ட் படம் வருவதற்கு முன்னரே அதன் பாடல்கள் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஜிஎஃப்-2 படம் தான் முதன் முதலில் கன்னட பட உலகில் ஐமேக்ஸ் (IMAX) தொழில் நுட்பத்தில் வர உள்ளது.
நெல்சன் திலீப்குமாருக்கு இது 3 வது படம், அடுத்து அவர் தலைவர் 169 இயக்க உள்ளதால் எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
கேஜிஎஃப்-2 பீஸ்ட் மோதலா என்று கேட்டபோது யாஷ் அதை மறுத்து விஜய் சீனியர் விஜய் ரசிகர்கள் என் படத்தை பார்ப்பார்கள், என் ரசிகர்கள் விஜய் படத்தை பார்ப்பார்கள் என்றார்.
பீஸ்ட் படம் 150 கோடி ரூபாயை கடந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ரெட் ஜெயண்ட் விநியோக உரிமை பெற்றுள்ளது. படம் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப்-2 படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது. சஞ்சய்தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் படத்தில் உள்ளனர்.
இரண்டு படங்களிலும் பிரம்மாண்டத்துக்கு குறைவிருக்காது அதே நேரம் கேஜிஎஃப்-2 படத்தை அனைத்து ரசிகர்களும் கண்டு களிப்பார்கள் அதே நேரம் பீஸ்ட் இந்திய திரைப்படங்களில் எதிர்பார்க்கப்படும் படங்களில் IMDB டாப் 10 ல் உள்ளது.
கேஜிஎஃப் -2 படம் பிஜிஎம்முக்கு பெயர் போனது. அதே நேரம் பீஸ்ட் படமும் அதற்கு சோடை போகவில்லை என இன்று சண்டை காட்சிகளில் மியூசிக் எப்படி என வெளியிட்டுள்ளனர்.