Tap to Read ➤

ஓடிடியில் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கிரைம் திரில்லர் வெப் சீரீஸ்

தமிழில் பல கிரைம் சினிமாக்களை விரும்பும் ரசிகர்கள் திரைப்படத்தை விட மிகச்சிறப்பாக எடுக்கப்பட்ட வெப் சீரீஸ்களை பார்த்து ரசிக்கலாம். அது என்னென்ன என்பதை பார்ப்போம்.
Filmibeat Tamil
கிரைம் வெப்சீரீஸ் பெரும்பாலும் இந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இவைகள் பெரும்பாலும் ரா, போலீஸ், உளவுத்துறை செயல்பாடுகளை விவரிக்கும் தொடர்கள்.
முதலில் குறிப்பிட வேண்டிய கிரைம் தொடர் டெல்லி கிரைம். தமிழில் டப் செய்யப்பட்டு 2 சீசன்களாக வந்துள்ளது. குற்றச்சம்பவத்தில் போலீஸ் புலனாய்வு குறித்து சரியாக எடுக்கப்பட்ட தொடர் இது. ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸில் உள்ளது.
டெல்லி கிரைம்: சீசன் 1 (2019) இதில் நிர்பயா வழக்கை புலனாய்வு செய்வது போல் எடுத்துள்ளார்கள். டெல்லி டெபுடி கமிஷனராக ஷெஃபாலி ஷா அருமையாக நடித்திருப்பார். போலீஸ் புலனாய்வு குறித்து ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்.
டெல்லி கிரைம் சீசன் 2 (2022) இதில் கச்சா பனியா என்கிற பூர்வக்குடி மக்கள் போர்வையில் கொள்ளை அடிக்கும் கும்பலை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் கதை. டெல்லி கிரைம் சீசன் 1 குழுவே இதிலும் நடித்துள்ளனர்.
’ஃபேமிலி மேன்’ சீரீஸ். இது ’ரா’ வில் பணியாற்றும் அதிகாரியைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரா அதிகாரி ஆனால் அமைதியான குடும்ப தலைவராக மனோஜ் பாஜ்பாயி நடித்திருப்பார். பிரியாமணி, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்த இந்த சீரீஸ் 2 சீசன்களாக வந்தது. இது அமேசான் பிரைமில் வெளியானது.
’ஃபேமிலி மேன்’ சீசன் 1 (2019) இதில் பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிக்க நடக்கும் கதை அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை. ஒருபுறம் குடும்பம் மறுபுறம் பணிச்சுமையை மீறி ரா அதிகாரிகள் இயங்குவது குறித்து சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும்.
ஃபேமிலி மேன்’ சீசன் 1 (2021) இந்த சீசன் விடுதலைப்புலிகள் தமிழகத்தில் சதிச் செயல செய்ய ஈடுபடுவதும் அதை முறியடிப்பதில் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும். இந்த சீரிஸில் மனோஜ் பாஜ்பாய் தவிர விடுதலை புலியாக சமந்தா சிறப்பாக நடித்திருப்பார்.
ஸ்பெஷல் ஓபிஎஸ் (ஸ்பெஷல் ஆபரேஷன்) சீசன் 1, சீசன் 1.5 என இரண்டு தொடர்களாக வந்தது. இதுவும் ரா உளவுத்துறை எப்படி செயல்படுகிறது. என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என அழகாக சொன்ன சீரீஸ்.
ஸ்பெஷல் ஓபிஎஸ் முதல் சீசனில் (2020) 2001 பாராளுமன்ற தாக்குதலை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை அடிப்படையில் எடுக்கப்பட்டது. 5 பேர் கொல்லப்பட ஒருவர் மட்டும் தப்பிக்க அவரை 19 ஆண்டுகள் தேடி பிடிப்பதுதான் கதை.
ஸ்பெஷல் ஓபிஎஸ் சீசன் 1.5 (2021) இந்த சீசனில் ஆப்ரேஷன் ரா தலைவரை ஆடிட்டிங் கமிட்டி விசாரிப்பதும், அவரது செயல்பாடுகள், ரா செயல்பாடுகளில் உள்ள பிரச்சினைகளையும் அழகாக அலசி இருப்பார்கள்.
முக்பீர் வெப் சீரீஸ் 2022 ஒரு உளவாளியின் கதை இது 1965 ஆம் ஆண்டு யுத்த மேகங்கள் சூழ்ந்த காலக்கட்டத்தில் அதற்கு முன் 2 ஆண்டுகள் பாகிஸ்தானில் உளவாளியாக செயல்பட்டவர் கதையை அழகாக எடுத்திருப்பார்கள் பார்க்கவேண்டிய தொடர்.
இன்னும் மிர்சாபூர் 2 சீசன், விலங்கு, ஃபிங்கர் டிப்ஸ், சுழல், தமிழ் ராக்கர்ஸ் என பல தொடர்கள் உள்ளன பின் வரும் ஸ்டோரியில் பதிவிடப்படும்.