Tap to Read ➤

நீங்கள் மிஸ் பண்ண விரும்பாத 10 ஹாலிவுட் டைரக்டர்கள்..அவர்கள் படங்கள்..

உலகைக்கவர்ந்த ஹாலிவுட் இயக்குநர்கள் வரிசையில் முதல் பாகத்தில் ஸ்டீவன் ஸ்பீல் பர்க், ஜேம்ஸ் கேமரூன் பற்றி பார்ப்போம்.
ஹாலிவுட் உலகின் சூப்பர் இயக்குநர்களைப்பற்றி பார்ப்போம். இவர்கள் மிகச்சிறந்த படங்களை கொடுத்தவர்கள்.
முதலில் நாம் பார்க்கப்போவது ஸ்டீவன் ஸ்பீல் பர்க். இவரை அறியாத தமிழக ரசிகர்களே இருக்க மாட்டார்கள். ஜாஸ், இன்டியானா ஜோன்ஸ், ஜுராசிக் பார்க் படங்களில் நமக்கு பரிச்சயமானவர்.
டூயல் என்கிற சிறிய படத்தின் மூலம் அறிமுகமான ஸ்பீல்பர்க் பின்நாளில் மிக அற்புதமான படங்களை எடுத்தார். அவர் எடுத்த ச்யின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் ஏராளம். ஆஸ்கர் அவார்டுக்கு 19 முறை பரிந்துரைக்கப்பட்டு 3 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.
ஜாவ்ஸ் (1975), ரெய்டர்ஸ் ஆஃப்தி லாஸ்ட் ஆர்க் (1981), ஈடி (1982), இண்டியானா ஜோன்ஸ் (1984) 3 பாகங்கள், ஜுராசிக் பார்க், சிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1993), ஜுராசிக் பார்க்-2 (1997),வார் ஆஃப் தி வார்ல்ட் (2005) உள்ளிட்டவை முக்கியமானவை ஆகும்.
அவரது படங்களில் வரும் முன் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை பதிவு செய்வார் அதில் ஒரு படம் ரெடி பிளேயர் ஒன் ( விர்ச்சுவல் உலகை சொல்லும் படம்) . ஆர்டிஃபீஷியல் இண்டலிஜென்ஸ் குறித்து உலகம் அறிமுன் அதுகுறித்த படம் எடுத்தவர்.
அடுத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். தமிழக ரசிகர்களிடம் 1984 ஆம் ஆண்டு அர்னாலிடின் டெர்மினேட்டர் படம் மூலம் அறிமுகமானார். அதற்கு முன் பிரானா என்கிற படத்தை எடுத்திருந்தார்.
அதற்கு பின்னர் உலகை கலக்கிய காதல் காவியமான டைட்டானிக் படம் மூலம் உலகை திரும்பிப்பார்க்க வைத்தார், அவதார் படம் அடுத்து வந்து அசத்தியது. ஹாலிவுட் ராஜமவுலி என்று சொல்லும் அளவுக்கு பிரம்மாண்டம் என்றால் கேமரூன்.
இவரது படங்களில் ஏலியன்ஸ், ட்ரூலைஸ், டெர்மினேட்டர்-2, அவதார் படம் மக்களைக் கவர்ந்த படங்களில் மிகச்சிறப்பானது. இதில் அவதார் 3டி படம் ஆகும். கிட்டதட்ட விர்ச்சுவல் உலகம் போன்ற கதையமைப்பு கொண்டது.
அடுத்து ஜேம்ஸ் கேமரோனின் அவதார்-2 இந்த ஆண்டிலும், அவதார்-3 2024 ஆம் ஆண்டிலும், அவதார் -4 2026 , அவதார்-5 2028 ஆம் ஆண்டிலும் வர உள்ளதாக அறிவித்து வேலைகள் நடந்து வருகிறது. இந்தப்படங்கள் 3டி ஆக வந்தாலும் கண்ணாடி தேவை இல்லை.
ஜேம்ஸ் கேமரூன் தனது படங்களுக்காக ஆஸ்கர் அவார்டுக்காக 41 முறை பரிந்துரைக்கப்பட்டு 21 முறை ஆஸ்கர் அவார்டுகளை வென்றார்.
இதுபோன்று அடுத்தடுத்த இணைப்பில் உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களும் அவர்களின் படைப்புகள் குறித்தும் வெளிவரும். பார்ட்-2 -ல் இயக்குநர்கள் கிரிஸ்டோஃபர் நோலன், குயிண்டன் டோரண்டினோ (கமலுக்கு பிடித்த இயக்குநர்) குறித்து பார்ப்போம்.Start typing...