Tap to Read ➤

நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத ஹாலிவுட் இயக்குநர்கள் பார்ட் 5

ஹாலிவுட் இயக்குநர்களில் ஹாரர் படங்கள், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள், குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், cast away, forrest Gump, Flight போன்ற வித்தியாசமான கதைக்களன்களை படமாக்கியவர் ராபர்ட் ஜெமெகிஸ்.
Filmibeat Tamil
நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத ஹாலிவுட் இயக்குநர்கள் பார்ட் 5/
சயின்ஸ் பிக்‌ஷன் இயக்குநர்களில் பிரபலமானவர் ராபர்ட் ஜெமெகிஸ். ஆனால் இவரது படங்கள் மக்களுக்கு அதிக பரிச்சயமானவை.
பேக் டு தி ஃபியூச்சர் சீரிஸ் படங்கள் டைம் டிராவல் பற்றி அதிகம் பேசப்பட்டது. இதன் மூலம் தமிழக ரசிகர்கள் வரை பிரபலமானார்.
இந்தப்படத்தில் பயன்படுத்திய கார் ஏலம் விடப்பட்டதில் எதிர்பார்க்கமுடியாத அளவுக்கு ஏலத்தில் போனது.
காஸ்ட் அவே என்கிற படம் 3 ஆண்டுகள் ஒரு தீவில் தனிமையில் மனிதர்கள் இல்லாமல் சிக்கிக் கொள்ளும் மனிதன் எப்படி வாழ்கிறார் என அற்புதமாக எடுத்திருப்பார். ஹீரோ டாம் ஹாங் சிறப்பாக நடித்திருப்பார்.
காஸ்ட் அவே படத்தில் பேச ஆள் இல்லாத ஹீரோ கால்பந்துடன் பேசிக்கொண்டிருப்பார், அதை கருவாக வைத்து கடைசி விவசாயி படத்தில் மனித மன உணர்வு எப்படிப்பட்டது என்பதை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.
70 வயதாகும் ராபர்ட் ஜெமெகிஸ் ஒரு அமெரிக்கர். 1978 ஆம் ஆண்டு திரைப்படத்தை இயக்கத்தொடங்கினார். இயக்குநர், தயாரிப்பாளர் , திரைக்கதை எழுதுபவர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
ராபர்ட் ஜெமெகிஸ் 1978 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை படம் இயக்கி வருகிறார். இவரது ஆஸ்தான நடிகர் என்றால் டாம் ஹாங்கை சொல்லலாம். காஸ்ட் அவே, ஃபாரஸ்ட் கம்ப் படங்கள் சிறப்பான படங்கள் ஆகும்.
ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் ஒரு சொன்னதை யோசிக்காமல் செய்யும் ஒரு அடிமுட்டாள் ராணுவ ஜெனரல் வரை உயர்வதுதான் கதை. மிக நகைச்சுவையாக இருக்கும். இந்தப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இந்தப்படத்தில் நடித்த டாம் ஹாங், இயக்கிய ராபர்ட் ஜெமெகிஸ் இருவருக்குமே ஆஸ்கர் விருது கிடைத்தது. இது தவிர போலார் எக்ஸ்பிரஸ் என்கிற படத்தை இயக்கினார்.
2004 ஆம் ஆண்டு வெளியான போலார் எக்ஸ்பிரஸ் குழந்தைகளுக்கான சிறப்பான அனிமேஷன் படம். கிராபிக்ஸ் அற்புதமாக இருக்கும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்த படம்.
விமான விபத்துக்குப்பின் பைலட்டுகள் அடையும் மனத்துயரம், உளவியல் பிரச்சினை, விசாரணை உள்ளிட்டவைகளை வைத்து எடுக்கப்பட்ட படம் ஃபிளைட். இந்த படத்தில் டாஞ்சல் வாஷிங்க்டன் சிறப்பாக நடித்திருப்பார்.
ராபர்ட் ஜெமெகிஸ்க்கு ஹாரர், திரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் தயாரித்த 17 படங்களில் பெரும்பாலானவை ஹாரர் திரில்லர் படங்களே.
அவர் தயாரித்த தர்ட்டீன் கோஸ்ட், கோஸ்ட் ஷிப், ஹவுஸ் ஆஃப் வேக்ஸ் போன்றவை மிகவும் ரசிக்கப்பட்ட படங்கள்.
இயக்குநராக சமீப காலமாக அவர் எடுத்த படங்கள் பெரிதாக பேசப்படாவிட்டாலும் தயாரித்த படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் இயக்கிய பேக் டூ த ஃப்யூச்சர், காஸ்ட் அவே, ஃபாரஸ்ட் கம்ப் படத்தை பார்த்தவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
‘ராபர்ட் ஜெமெகிஸ் இயக்கிய திரைப்படங்கள் 36 விருதுகளுக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை பெற்றுள்ளது.