Tap to Read ➤

காதலித்து திருமணம் செய்து வெற்றிகரமாக வாழும் திரையுலக பிரபலங்கள்

சினிமாத்துறையில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை திரையுலக பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றனர்.
Filmibeat Tamil
இன்று நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்- மஞ்சுமா திருமணம் நடந்துள்ளது. இது காதல் திருமணமாகும். இவர்கள் வெற்றிகரமாக இணைபிரியாமல் வாழ வாழ்த்துகள்
இதற்கு முன்னர் நடந்த பிரபலமான காதல் திருமணம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணமாகும். 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர்
நடிகர் அஜித்-ஷாலினி இருவரும் ஒன்றாக நடித்தபோது காதலித்து 2000-ம் ஆண்டு திருமணம் செய்து 22 ஆண்டுகளாக வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றனர்
நடிகர் சூர்யா-ஜோதிகா காதல் ஜோடி ஒன்றாக நடித்தபோது காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இன்றுவரை இந்த ஜோடி ஒன்றாக திரைத்துறையிலும் வெற்றிகரமான ஜோடியாக உள்ளனர்
குஷ்பு-சுந்தர்-சி இருவரும் காதலித்து 2000-ம் ஆண்டு திருமணம் செய்து 22 ஆண்டுகள் வெற்றிகரமாக வாழும் திரைஜோடி. இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்
நடிகர் பிரசன்னா-சினேகா ஜோடி ஒன்றாக நடிக்கும்போது காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். 13 ஆண்டுகள் இணைபிரியா ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர்
கடந்த மே மாதம் நடிகை நிகில் கல்ராணி-ஆதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணம். அதிக அளவில் போட்டோ ஷூட் நடத்தி கொண்டாடியது இந்த ஜோடி
திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர் தன்னுடன் நடித்த வி.என்.ஜானகியை மணந்தார். இந்த ஜோடி மரணம் வரை இணைபிரியா ஜோடியாக இருந்து வாழ்ந்து மறைந்த ஜோடி எனலாம்