Tap to Read ➤

நடிகர் விக்ரமுக்கு சாதாரண நெஞ்சுவலி! மாரடைப்பு இல்லை

இன்று (ஜூலை 08, 2022), திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரமின் உடல்நலம் குறித்து காரணங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
விக்ரம், தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நடிகர் ஆவார். இவருக்கு 'சியான் விக்ரம்' என்ற புனைப்பெயரும் தமிழ் சினிமாவில் உண்டு.
விக்ரம் நடிப்பில் 2022, ஆகஸ்ட் 11ஆம் தேதியில் 'கோப்ரா' திரைப்படமும், 2022 செப் 30ல் 'பொன்னியின் செல்வன்' (PS1) திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இன்று (ஜூலை 08, 2022) நடிகர் விக்ரம் திடிரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ள நிலையில், இப்படி ஒரு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விக்ரம் தரப்பிலிருந்து "நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை லேசான நெஞ்சுவலி மட்டும்தான். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என விக்ரமின் மேனேஜர் சூரிய நாராயணன் தகவல் அளித்துள்ளார்.
விக்ரம் நலமுடன் இருப்பதாகவும் அவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் வீடு திரும்பி விடுவார், என விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up