Tap to Read ➤

கலைக்கு ஏது மொழி?...அஜய்தேவ்கான் அறிவாரா?

கலைக்கு மொழி ஒரு இடையூறே இல்லை. நல்ல கலையம்சமுள்ள படைப்புகள் மொழி கடந்து ரசிக்கப்படும். இதை அறியாமல் பதிவிடும் அஜய்தேவ்கன் போன்றோர் விமர்சனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
Filmibeat Tamil
மக்களை சந்தோஷபடுத்தும் கலைக்கு மொழி ஒரு இடையூறான ஒன்றே அல்ல, நல்ல கலையம்சமுள்ள படைப்புகள் மொழி கடந்து ரசிக்கப்படும். இதை அஜய் தேவ்கான் அறியவில்லை
மொழி புரியாவிட்டாலும் இசைக்கு மொழி இல்லாததால் இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர், முகேஷ், மன்னாதேவ், முகமதுரஃபி, கிஷோர் குமார் குரல் அனைத்து இந்திய மக்களாலும் ரசிக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் எனும் கலைஞன் மொழி நாடு கடந்து உலக நாடுகளிலும் மதிக்கப்பட்டார். ராஜ்கபூர், நர்கீஸ் நடித்த படங்கள் சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.
எம்ஜிஆர், என்.டி.ஆர் நாடாளும் முதல்வராகினர். ஜெயலலிதா இந்திய அளவில் ஆளுமைமிக்க முதல்வராக இருந்தார். தனது படைப்பாற்றலால் கூர்மிகு வசனங்களால் போற்றப்பட்டார் கருணாநிதி.
பாலிவுட் உலகின் கபூர் குடும்பம், அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சுனில்தத், சத்ருகன் சின்ஹா, ஜெயாபச்சன், தென் இந்தியாவிலிருந்து பாலிவுட் சென்ற ஹேமாமாலினி, ஜெயப்பிரதா போன்றோர் அரசியலிலும் கால் பதித்துள்ளனர்.
தென் இந்தியாவிலிருந்து சென்ற கமல், ரஜினி, சிரஞ்சீவி, ஹேமாமாலினி, ரேகா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் அங்கும் முத்திரைபதித்தனர். இதுதான் இந்தியா.
கமல்ஹாசன் எனும் தென் இந்திய, தமிழ் பட கலைஞர் பாலிவுட் தாண்டி உலக தரத்திற்கு சினிமாவை கொண்டுச் சென்றார், அவரது ஹே ராம் பான் இந்தியா படைப்பாக பாராட்டப்பட்டது. புஷ்பக் படமும் அவ்வாறே புதிய படைப்பாக இருந்தது.
தென் இந்தியாவிலிருந்து சென்ற ராம்கோபால்வர்மா, மணிரத்னம், ஷங்கர் போன்றோரை பாலிவுட் உலகம் ஏற்றுள்ளது. வட இந்திய இசையமைப்பாளர்கள் தமிழிலும் இசையமைத்துள்ளனர்.
எஸ்.பி.பி, ஜானகி போன்ற பாடகர்களுக்கு மொழி ஏது? இதுதான் இந்தியா. மொழி கலைக்கு தடையாக இருந்ததில்லை.
திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களும், படைப்பாளிகளும் அதை பெரிதாக வேற்றுமை பாராட்டியதில்லை. ரசிகர்களும் அப்படி பார்த்ததில்லை. பார்த்திருந்தால் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் வந்திருக்கவே முடியாது.
ஆனால் சமீப காலமாக அரசியலில் எழும் இப்பிரச்சினை கலைஞர்களையும் பாதித்துள்ளதே அஜய்தேவ்கான் போன்றோரின் மாற்றம் எனலாம்.
இந்த எண்ணம் தற்போது கலைத்துறையினருக்கும் ஆபத்தான நோயாக பரவியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் வெளிப்பாடே அஜய்தேவ்கான் போன்ற நடிகர்களின் வெளிப்பாடு ஆகும்.
சினிமாத்துறை தற்போதைய நவீன தொழிற்நுட்ப வளர்ச்சியால் உலக அளவிலான மார்க்கெட்டை நோக்கி செல்கிறது. நடிகர் ரஜினிகாந்த், அஜித் போன்ற தென் இந்திய கலைஞர்கள் படம் ஓவர்சீஸ் ரிலீஸ் செய்யப்படுகிறது.
தென் இந்திய நடிகர்கள், இயக்குநர்களின் கலையுலக அப்டேட் காரணமாக உலக அளவிலான படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. ராம்கோபால்வர்மா, ஷங்கர், ராஜமவுலி, நீல் போன்றோர் எடுத்த படங்கள் உலக அளவில் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
ராஜமவுலியின் பாகுபலி இரண்டு பாகங்களும், ஆர்.ஆர்.ஆர் படமும், ஷங்கரின் எந்திரன், 2.0 போன்ற படங்களும், நீல் இயக்கத்தில் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படமும் பெரும் வரவேற்பை இந்திய அளவில் பெற்று பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்துள்ளது.
சமீப காலமாக பான் இந்தியா எனும் வகைப்படங்கள் வெளிவருகின்றன. அதில் சமீபத்திய வரவான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், கேஜிஎஃப்-2 ஆகிய படங்கள் சிறந்த உதாரணம்.
இத்தனைக்கும் அஜய் தேவ்கான், ஆர்.ஆர்.ஆர் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார், தமிழில் வந்த சிங்கம் படத்தின் இந்தி ரீ மேக்கில் நடித்துள்ளார், மலையாளத்தில் வெற்றிப்படைப்பாக வந்த திரிஷ்யத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படை உண்மைகளை அறியாமல் பதிவிட்ட அஜய்தேவகானுக்கு மிகுந்த பொறுப்புடன் பதிலளித்தார் கிச்சா சுதீப், அத்துடன் என் பதிவை நான் கன்னடத்தில் பதிவிட்டால் என்ன ஆகும் யோசியுங்கள் என்றும் பதிவிட்டார்.
பாடகி சின்மயி இந்தி ராஷ்ட்ரா பாஷை ராஜ்ய பாஷை அல்ல என அஜ்ய் தேவ்கானுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.
நெட்டிசன்கள் எதிர்ப்பால் உண்மை நிலை அறிந்த அஜய் தேவ் கான் அந்தர் பல்டி அடித்து தான் அவ்வாறு நினைக்கவில்லை மொழிப்பெயர்ப்பில் வந்த தவறு என பதிவிட்டு நழுவினார்.