Tap to Read ➤

ஓடிடி தளத்தில் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய கிரைம் த்ரில்லர் சீரீஸ்

ஓடிடி தளத்தில் வீட்டில் அமர்ந்தப்படி நீங்கள் பார்த்து ரசிக்கும் கிரைம் த்ரில்லர் வெப் சீரீஸ்கள் பற்றி குறிப்பிட்டு வருகிறோம் அதில் கூடுதலாக பார்க்கவேண்டிய சீரீஸ்கள் இதோ
Filmibeat Tamil
கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 1. இதில் கல்லூரி மாணவன் மற்ற நேரங்களில் அக்காள் கணவரின் கால்டாக்சியை ஓட்டுகிறார். அப்போது அவர் ஒரு கொலைகேசில் சிக்குகிறார். அவரை மீட்டு வருவதே கதை. பங்கஜ் திரிபாதி வழக்கறிஞராக கலக்கி இருப்பார்
கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 1. இதில் கல்லூரி மாணவன் மற்ற நேரங்களில் அக்காள் கணவரின் கால்டாக்சியை ஓட்டுகிறார். அப்போது அவர் ஒரு கொலைகேசில் சிக்குகிறார். அவரை மீட்டு வருவதே கதை. பங்கஜ் திரிபாதி வழக்கறிஞராக கலக்கி இருப்பார்
கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 2 இதில் கணவனான புகழ்பெற்ற மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை மனைவி கொன்றார் என வழக்கு. அனைவரும் எதிராக நிற்க அந்த பெண்ணுக்காக வாதாடி உண்மையை வெளிக்கொணருவார் பங்கஜ். நீதிமன்ற வாதங்கள் அருமையாக இருக்கும்
கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 3 விவாகரத்து ஆகி திருமணம் செய்துக்க்கொண்ட பெண்ணின் மகன் இரண்டாவது கணவரின் மகளான சீரியல் குழந்தை நட்சத்திரத்தை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட திறமையான வாதத்தால் பங்கஜ் முறியடித்து சிறுவனை வெளிகொணருவார்
உபி அரசியலில் ரவுடியிசம் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அழகாக எடுத்துள்ளனர். மிர்சாபூர் நகர் தாதாவாக பங்கஜ் திரிபாதி நடித்திருப்பார். உபி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போட்டியை விளக்குவதே 2 பாகத்தின் கதை.
மிர்சாபூர் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வந்தது. முதல்பாகத்தில் மிர்சாபூர் தாதா பங்கஜின் மகனின் அராஜகம், அவருக்கு கீழ் பணியாற்றும் அண்ணன் தம்பிகள் அவரது எதிரியாக மாறுவதும் கதை. இரண்டு பாகங்களும் அமேசான் பிரைமில் தமிழில் உள்ளது
மிர்சாபூர் இரண்டாம் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. முதல்பாகத்தில் பங்கஜின் மகனால் பாதிக்கப்பட்டு சகோதரனை இழந்த மற்றொரு சகோதரன் பழி வாங்குவதும், திட்டமிட்டு அனைவரையும் அழிப்பதே கதை
படால் லோக் இது ஒரு சானல் எடிட்டரை கொலை செய்ய வரும் 4 பேரை பிடிக்கும் இன்ஸ்பெக்டர் அந்த கேஸில் உண்மை குற்றவாளிகளை நெருங்கும்போது அவரை சஸ்பெண்ட் செய்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தனியாக வழக்கை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்கிறார். அமேசான் பிரைமில் உள்ளது
ஹோஸ்டேஜஸ் முதலமைச்சரை கொல்ல திட்டமிடும் பெரிய கும்பல் அதற்கு முன்னாள் போலீஸ் அதிகாரியை பயன்படுத்துகிறது. மருத்துவமனை பெண் மருத்துவர் குடும்பத்தை பிடித்து வைத்து மிரட்டுவதும், பின்னர் அது முறியடிக்கப்படுவது என 2 சீசனாக வெளிவந்தது. தமிழில் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
முதல் பாகத்தில் மிகப்பெரிய மருத்துவமனையின் புகழ்பெற்ற பெண் சர்ஜன் வீட்டுக்குள் நுழையும் கும்பல் மருத்துவரின் குடும்பத்தை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு முதல்வரை கொலை செய்ய பெண் மருத்துவரை மிரட்டுகிறது. இதிலிருந்து மருத்துவர் குடும்பம் தப்பிப்பதே முதல் சீசன்
இரண்டாவது சீசனில் முதல்வரை கடத்தும் போலீஸ் அதிகாரி சதிகளை முறியடிக்க முயல்வதும் அதனால் அவர்கள் சிக்கலில் சிக்கி மீள்வதுமே கதை. தமிழில் வெளிவந்த சீரீஸ் என்பதால் பரபரப்பாக செல்கிறது.
அடுத்து ரங்க்பஜார், தார்ஸ்டே நைட் உள்ளிட்ட பல கிரைம் வெப் சீரீஸ்கள் பற்றி பார்ப்போம்