Tap to Read ➤

திருச்சிற்றம்பலம் - சுவாரஸ்ய தகவல்கள்

தனுஷ், ராசி கண்ணா, நித்யா மேனன் நடிப்பில் ஆகஸ்ட் 18ல் உலகமெங்கும் வெளியாகும் திருச்சிற்றம்பலம் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
திருச்சிற்றம்பலம் - இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்.
இப்படத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தினை தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் இணைந்து விநியோகம் செய்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
படிக்காதவன் (2009), ஆடுகளம் & மாப்பிள்ளை (2011) படங்களுக்கு பின்னர் தனுஷ் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் நான்காவது முறையாக இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் மித்ரன் ஜவகர் - தனுஷ் கூட்டணியில் யாரடி நீ மோகினி (2008), குட்டி, உத்தமபுத்திரன் (2010) படங்களுக்கு பின்னர் இருவரும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படத்தின் பாடலான மேகம் கருக்காதா, தாய் கிழவி, தேன்மொழி, லைப் ஆஃப் பழம் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு புகழ் பெற்றுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தின் கதை & பல சுவாரஸ்ய தகவல்கள்
திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வீடியோக்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்