Tap to Read ➤

இயக்குனர் ஹரி & அருண் விஜய்யின் 'யானை' படத்தின் டிரைலர் வெளியானது

இயக்குனர் ஹரி & அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள யானை படத்தின் டிரைலர் இன்று 2022, மே 30ல் இணையத்தில் வெளியானது பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நாயகனாக நடித்துள்ள திரைப்படம், யானை.
இத்திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராதிகா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
யானை படத்திற்கு கே.எ.சக்திவேல் ஒளிப்பதிவில், ஆண்டனி எடிட்டிங் செய்ய, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
யானை திரைப்படம் உலகமெங்கும் 2022, ஜூன் 17ல் திரையரங்குகளில் வெளியாகிறது.
தடம், மாஃபியா படத்திற்கு பின்னர் அருண் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
யானை படத்தின் டிரைலர் 2022, மே 30ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.
இயக்குனர் ஹரி பட பாணியில் யானை திரைப்படமும் அதிரடி வசனங்களோடு சுவாரஸ்யமான திரைக்கதையில் உருவாகியுள்ளது.
யானை படத்தின் டிரைலர்
டிரைலர்