Tap to Read ➤

Mini Review.. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் விமர்சனம்

டிஸ்க்ரிப்ஷன்: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படம் எடுப்பதாக ஹீரோ பெனடிக்ட் கம்பர்பேட்ச் படமாக இல்லாமல் படம் அப்படியே முழுக்க வாண்டா (அ) ஸ்கார்லெட் விட்ச்சின் படமாகத்தான் இருக்கிறது.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படம் ஹீரோ பெனடிக்ட் கம்பர்பேட்ச் நடிப்பில் இயக்குநர் சாம் ராய்மி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது
இந்தப் படம் முழுக்க முழுக்க வில்லன் வாண்டா (அ) ஸ்கார்லெட் விட்ச்சின் படமாகத்தான் இருக்கிறது. ஹீரோவை விட வில்லனை எந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக காட்ட வேண்டும் என்பதை பல இயக்குநர்கள் இந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தை பார்த்து கற்றுக் கொள்ளலாம்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? மல்டிவெர்ஸில் ஸ்டீவன் ஸ்ட்ரேஞ்ச் என்ன மாயாஜாலம் செய்தார் என்பதை பார்ப்போம்
மல்டிவெர்ஸ் டிராவல் செய்யக் கூடிய மாய சக்திகளை கொண்ட வேறு ஒரு யூனிவர்ஸில் இருக்கும் வாண்டாவிடம் அபலைப் பெண்ணை காப்பாற்ற டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எடுக்கும் முயற்சியே இப்படம்.
இதற்காக அவர் ஏழு கடல், ஏழு மலையெல்லாம் இல்லைங்க.. பல யூனிவர்ஸ்களை தாண்டி பயணம் சென்று எப்படி தடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை
தன்னை விட பல மடங்கு சக்திவாய்ந்த வில்லி ஸ்கார்லெட் விட்ச்சாக வாண்டா மாறி தாக்க வரும் நிலையில், அவரிடம் இருந்து அமெரிக்கா சாவேஸை காப்பாற்ற போராடும் காட்சிகளும், அதற்கு அவர் கொடுக்கும் விலைகளும் ரசிகர்களை அட போட வைக்கிறது
வயது முதிர்ந்த தலை முடி, தாடி நரைத்த டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக நடித்து ரசிக்க வைக்கிறார். சில சர்ப்ரைஸ் ஆன கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் இடத்தில் இவர் அடிக்கும் ஜோக் 90-ஸ் கிட்ஸ்களை சிரிக்க வைக்கிறது
ஸ்பைடர்மேன் மல்டிவெர்ஸில் பல ஸ்பைடர்மேன்கள் வந்து உதவுது போல இல்லாமல், இங்கே இவருக்கும் இன்னொரு இவருக்குமே வைத்துள்ள சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன
மகன்களை இழந்து வாடும் ஒரு அம்மாவின் கனவில் அவரது இரு குழந்தைகள் வரும் காட்சி ஆகட்டும், அதே குழந்தைகள் தாயை பேயாக பார்க்கும் இடமாகட்டும் தனது நடிப்பால் மெர்சல் காட்டி உள்ளார் நடிகை எலிசபெத் ஓல்சன்
எத்தனை படைகள் வந்தாலும், எத்தனை சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் அத்தனை பேரையும் துவம்சம் செய்யும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை அப்படி வடிவமைத்துள்ளனர்.  அதன் காரணமாகவே இந்த படம் அவருடைய படமாக மாறி விடுகிறது
(ஸ்பாய்லர் அலர்ட்) பிரம்மாண்டமான இந்த மல்டிவெர்ஸ் படத்தில் இசையை ஆயுதமாக்கி டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போடும் சண்டைக் காட்சிகள் அட்டகாசம் என்று தான் சொல்ல வேண்டும்
மார்வெல் தயாரிப்பே படத்திற்கு பெரும் பிளஸ் தான். ஸ்கார்லெட் விட்சின் எமோஷனல் டச் ரசிகர்களை நல்லாவே கனெக்ட் செய்கிறது. மேலும், மார்வெல் சூப்பர் ஹீரோ படத்தில் இந்த முறை ஹாரர் ட்ரீட்மெண்டை இயக்குநர் சாம் ராய்மி நல்லாவே புகுந்து விளையாடி ரசிகர்களை தியேட்டரில் பயமுறுத்தி விடுகிறார்.
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் மைனஸே இல்லையா? என்கிற கேள்விக்கு கண்டிப்பாக இருக்கு என்பது தான் பதிலாக வரும். ஃபெண்டாஸ்டிக் 4, எக்ஸ்மேன், டாம் க்ரூஸ் அயன்மேனாக நடித்துள்ளார் என கிளப்பப்பட்ட பில்டப்புகளை நம்பி இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும்
மல்டிவர்ஸ் கான்ஸெப்ட்டை இஷ்டத்துக்கு சொல்வது போல சில இடங்களில் எண்ணத் தோன்றுவதும் படத்திற்கு பெரிய பலவீனமாகவே மாறி உள்ளது.
ஆரம்ப கால ஸ்பைடர்மேன் படங்களை எடுத்து மிரட்டிய இயக்குநர் சாம் ராய்மி தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். கண்களை கவரும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கும் பிசிறு தட்டாத மாயாஜால காட்சிகளுக்கும் பல ஆயிரம் கோடிகளை கொட்டி இந்த படத்தை மார்வெல் உருவாக்கி உள்ளது
3டியில் பெரிய தியேட்டர்களை இந்த படம் பார்த்தால் மட்டுமே அதன் முழு அனுபவத்தையும் ரசிகர்களால் உணர முடியும். மொத்தத்தில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அளவுக்கு இல்லை என்றாலும், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கான திரைக்கதையை பக்காவாக படமாக்கிய விதத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளனர்
மார்வலில் வரும் இலுமினாட்டி மெம்பர்கள் 5 பேருடன் வாண்டா சண்டைபோடுகிறார். இது படத்தில் முக்கிய திருப்புமுனை