Tap to Read ➤

விடுமுறையை அனுபவிக்க.. ஓடிடி, திரையரங்கில் வெளியான உங்களுக்கான படங்கள்

இன்றும் நாளையும் விடுமுறையை அனுபவிக்க ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியான திரப்படங்கள் உங்களுக்காக
Filmibeat Tamil
தமிழில் திரையரங்கில் நேற்று மூன்று படங்கள் வெளியானது. அதில் ஒரு படம் நித்தம் ஒரு வானம். நடிகர்கள்: அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடித்த இப்படம் கோபி சுந்தர் இசையில், ரா. கார்த்திக் இயக்கியுள்ளார்.
அடுத்து லவ் டுடே படம் வெளியாகியுள்ளது. கோமாளி படம் மூலம் கவனிக்க வைத்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கியுள்ளதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருடன் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மூன்றாவது படமாக காஃபி வித் காதல் படம் வெளியாகியுள்ளது. ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், அம்ரிதா அய்யர், மாளவிகா, ரைசா வில்சன், டிடி நீலகண்டன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன் நட்புக்காக ஆர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள படம். இயக்கம் சுந்தர் சி
உங்கள் ஓய்வு நேரத்தை வீட்டிலிருந்தே கழிக்க ஓடிடி தளத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்து ரூ.450 கோடியை அள்ளிய பொன்னியின் செல்வன் ஓடிடியில் அமேசான் பிரைமில் ரிலீசாகியுள்ளது.
இது தவிர ஜாலியாக பார்க்க தனுஷின் திருச்சிற்றம்பலம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் , நானே வருவேன் திரைப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே வெளியாகி 100 நாட்களை நோக்கி நகரும் விக்ரம் திரைப்படமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. நீங்களும் ரசிக்கலாம். வெற்றிமாறனின் பேட்டக்காளி ஆஹா ஓடிடி தளத்தில் மூன்றவது எபிசோடு வந்துள்ளது.
இதுதவிர மலையாளத்தில் புது வரவுகளாக ஓடிடி தளத்தில் ஆசிப் அலியின் கொத்து அமேசான் பிரைமிலும் சோனி லைவில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகும் கையும் களவும் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிரம்மாஸ்த்ரா படம் வெளியாகியுள்ளது. இது தவிர பிம்பிசாரா ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.
இதுதவிர ஐஸ்வர்யா லக்‌ஷுமி நடித்து கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகியுள்ள அம்மு படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
இதுதவிர மலையாளத்தில் வெளியாகியுள்ள பந்த்ரண்டு படம் அமேசான் பிரைமில் உள்ளது. இது தவிர ஆர்.பார்த்திபனின் இரவின் நிழல் படமும், மைக் மலையாளப்படமு பிரைமில் உள்ளது.
இவை தவிர தட்கா ( இந்திபடம்) அமர்பாலி (பெங்காலி) ஜி.5 -ஓடிடி தளத்தில் உள்ளது.
இது தவிர நெட்ஃபிலிக்ஸில் நாகார்ஜுனாவின் ’ரக்‌ஷன் தி கோஸ்ட்’ தமிழ் தெலுங்கில் வெளியாகியுள்ளது. எமலா ஹோம்ஸ் 2 வெப் சீரிஸும் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது.
அனிமேஷன் படமான மினியன்ஸ் 2 ரைஸ் ஆஃப் க்ரு அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கண்டுகளிக்கலாம்.
இந்தி ரசிகர்களுக்காக அக்‌ஷய குமாரின் ரக்‌ஷா பந்தன் படம் ஜீ.5 தளத்தில் வெளியாகியுள்ளது.