Tap to Read ➤

இதுதான் 'பீஸ்ட்' திரைப்படத்தின் கதையா..!

டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் கதை பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
நட்சத்திரங்கள் - விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன்

 இயக்கம் - நெல்சன் திலீப்குமார்

 இசை - அனிருத் ரவிச்சந்தர்
பீஸ்ட்
லிரிக் வீடியோ, டிரைலர் என பீஸ்ட் படத்தின் வீடியோக்கள் இணையதள யூ டியூபில் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.
2022 ஏப்ரல் 02ல் யூ டியூபில் வெளியான பீஸ்ட் டிரைலர் காட்சிகள் ரசிகளிர்களை பெரிய அளவில் கவர்ந்து இப்படத்திற்கு எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தின் கதை
>>>>>
சென்னையில் உள்ள ஒரு (Mall) வணிக வளாகத்தை தாக்கி அங்குள்ள வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை பணயக் கைதிகளாக மாற்றுகின்றனர், தீவிரவாதிகள்.
துப்பாக்கி முனையில் அங்குள்ள மக்களையும், தமிழக அமைச்சரின் குடும்பத்தினரையும் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் தீவிரவாதிகள், தமிழக அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் வைக்கின்றனர்.
ஒரு முக்கிய தீவிரவாதியை விடுவிக்க கோரி தீவிரவாதிகள் கூற, அதற்கு தமிழக அரசாங்கம் மறுத்தால் வணிக வளாகத்தில் உள்ள மக்களை கொள்வதாக மிரட்டுகிறார்கள்.
இந்திய ரா ஏஜென்ட் அதிகாரியான செல்வராகவன் தலைமை பொறுப்பை ஏற்று தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ரா ஏஜென்ட் அதிகாரியான விஜய் வணிக வளாகத்திற்குள் இருப்பதை அறிகிறார், செல்வராகவன்.
பின் விஜய் அங்குள்ள தீவிர வாதிகளுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது போல் மறைந்திருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி மக்களை காப்பாற்றுவதே படத்தின் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
பீஸ்ட் திரைப்படம் பற்றிய பல தகவல்கள்
படத்தின் தகவல்கள்