Tap to Read ➤

ஏழிசை மன்னர் டி.எம்.எஸ். நூற்றாண்டு விழா இன்று

ஏழிசை மன்னர் டி.எம்.எஸ். நூற்றாண்டு விழா இன்று
தமிழக ரசிகர்களை 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தன் வெண்கல குரலால் கட்டிப்போட்டவர் டி.எம்.எஸ். அவருக்கு இணையாக பாடியவர் பி.சுசிலா
டி.எம்.எஸ் எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி, கமல் சத்யராஜ் வரை 4 தலைமுறைகளுக்கு பாடியவர்.
1922 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் பிறந்தார். நூற்றாண்டு பிறந்த நாள் ஆண்டு இது.
22 வயது வரை சாதாரணமாக பாடியவர் 22 வது வயதில் ராஜாமணி ஐயரிடம் 2 ஆண்டுகள் முறைப்படி இசைப்பயிற்சி எடுத்தார்.
1946 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் பாடகராக அறிமுகமானார். பாகவதர் ஸ்டைலில் அந்தப்பாடலை பாடினார்.
தூக்கு தூக்கி படத்தில் 3 பாடல்கள் பாடியும் சிவாஜி கணேசன் அங்கிகரித்தால் தான் பாடல் வாய்ப்பு என்ற நிலை.
3 பாடலையும் கேட்ட சிவாஜி கணேசன் உடனடியாக அனைத்து பாடலையும் பாட அனுமதி அளித்தார்.
அதன் பின்னர் டி.எம்.எஸ் காட்டில் மழைதான் எம்ஜிஆருக்காக அவர் முதன் முதல் பாடிய மலைக்கள்ளன் படப்பாடல் ஹிட் அடித்தது.
எம்ஜிஆருக்கு பாடியதால் எனக்கு பெயர், சிவாஜிக்கு பாடியதால் அவருக்கு பெயர் வந்தது என்று டி.எம்.எஸ் பேட்டி அளித்திருந்தார்.
பட்டுக்கோட்டை, மருதகாசி, கண்ணதாசனின் கருத்தாழமிக்க வரிகளுக்கு வளமான குரல் வலிமை கொடுத்தவர் டி.எம்.எஸ்.
எம்ஜிஆருக்கு நாசியிலிருந்தும், சிவாஜிக்கு நாபிக்கமலத்திலிருந்தும், ஜெய்ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு வேறுவிதமாக பாடுவது டி.எம்.எஸ் வழக்கம்.
டி.எம்.எஸ்.க்கு மிகவும் பிடித்த பாடல் புதிய பறவை படத்தில் வரும் எங்கே நிம்மதி என்கிற பாடல். சவால் மிகுந்த பாடல் என்பார் அவர்.
அந்த நாள் ஞாபகம் பாடலுக்காக பாடல் பதிவு செய்யும் அறைக்குள்ளேயே ஓடி முடித்து மூச்சு வாங்க பாடியதாக சொல்வார்.
ஓய்வு நேரத்தில் பீச்சுக்கு செல்வது, ரெஸ்டாரண்டில் இட்லி, சாம்பார்,சட்னி சாப்பிடுவது டி.எம்.எஸ்.க்கு பிடிக்கும்.
30 ஆண்டுகள் தமிழ் திரையுலகை கட்டிப்போட்ட டி.எம்.எஸ் 1990 க்குப்பின் சத்யராஜுக்காக தாய்நாடு படத்தில் பாடிய அத்தனைப்பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
தமிழக பின்னனி பாடகர்களில் தன்னிகரல்லா திறமைப்பெற்றவர் டி.எம்.எஸ். அவர் மறைவுக்குப்பின்னரும் அவர்போல் ஒரு குரல் உள்ளவர் வரவில்லை.
டி.எம்.எஸ் முருகன் பாடல்கள் பக்திப்பாடல்கள் புகழ்ப்பெற்றவை. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் கச்சேரிகளில் முதல் பாடலாக பாடப்படும்.