Tap to Read ➤

பொன்னியின் செல்வன் போல் வந்து புகழ்பெற்ற சரித்திர படங்கள்

இதற்கு முன்னர் தொழில் நுட்ப வசதி இல்லாத காலகட்டத்தில் வெளியாகி சக்கை போடுபோட்ட சரித்திர புராண படங்களை பார்ப்போம்.
Filmibeat Tamil
எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் வரும் செப்.30 வெளியாக உள்ளது.
1957 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம் மாயாபஜார். மஹா பாரதத்தின் ஒரு பகுதியை வைத்து எடுக்கப்பட்ட படம். அபிமன்யூவாக ஜெமினியும், கிருஷ்ணனாக என்.டி.ஆரும், கடோத்கஜனாக ரங்காராவும் நடித்திருப்பார்கள்.
முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு சம்பூர்ணராமாயணம் வெளியானது. இதில் என்.டி.ராமாராவ், சிவாஜிகணேசன், பத்மினி, டி.கே.பகவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். டி.கே.பகவதி ராவணனாகவும், என்.டி.ஆர் ராமன் வேடத்திலும், சிவாஜி கணேசன் பரதன் வேடத்திலும் நடித்திருப்பர். ராகங்கள் குறித்து ராவணன் பாடும் சங்கீத சௌபாக்யமே பாடல் பிரசித்தி பெற்றது.
வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 ஆம் ஆண்டு வெளியானது. வெள்ளையரை எதிர்த்து போராடிய நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட படம். வசனத்தால் சிறப்புற்ற இப்படத்தில் சிவாஜி கணேசன் கட்ட பொம்மனாகவும், ஜெமினிகணேசன் பத்மினி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
1963 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கருணாநிதி இணைந்து தயாரித்த படம் காஞ்சித்தலைவன். இதில் பல்லவ மன்னனாக எம்ஜிஆர் நடித்திருப்பார். பானுமதி, விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர் நடித்திருப்பர்.
1964 ஆம் ஆண்டு வெளியான கர்ணம் ப்டம், மஹாபாரதத்தில் கர்ணன் பாத்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சிவாஜி கணேசன் கர்ணனாகவும், என்.டி.ஆர் கிருஷ்ணனாகவும், அசோகன் துரியோதனனாகவும் நடித்திருப்பர். உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் பிரபலமானது.
. 1965 ஆம் ஆண்டு வெளியானதிருவிளையாடல் படம் சிவ புராணத்தை அடிப்படையாக கொண்ட படம். திருவிளையாடல் படத்தில் சிவபெருமானாக சிவாஜி கணேசனும், நக்கீரனாக ஏ.பி.நாகராஜனும், தருமி வேடத்தில் நாகேஷும் நடித்திருப்பார்கள்.
மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியான படம். அகிலன் எழுதிய கயல்விழி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். எம்ஜிஆரின் கடைசி படம் இது. பாண்டிய மன்னன் வரலாற்றை பேசிய படம்.