Tap to Read ➤

பீஸ்ட் ட்ரெய்லர் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பீஸ்ட் படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகுகிறது. ஏப் 2 வெளியாகும் ட்ரெய்லரும் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளிவர உள்ள பீஸ்ட் படம் ரசிகர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஜிஎஃப்-2 படத்துடன் பீஸ்ட் போட்டியிட உள்ளதால் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஆர்.ஆர்.ஆர், வலிமை உள்ளிட்ட படங்களும் போட்டியில் உள்ளன.
பீஸ்ட் படத்தின் முதல் எதிர்பார்பாக வந்தது அரபிக்குத்து பாடல். இந்தப்பாடல் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்துள்ளது.
அடுத்து ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பீஸ்ட் படம் ஆடியோ லாஞ்சை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆடியோ லாஞ்ச் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பீஸ்ட் படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ஃபஸ்ர்ட் லுக் துவங்கி, செகண்ட் சிங்கிள் வரை அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இன்று மாலை 6-00 மணிக்கு பீஸ்ட் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் காலையில் வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய்யின் சமீபத்திய படங்களின் மாஸ் என்ட்ரி சீன்களை ஒன்றாக சேர்த்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் மாஸ் என்ட்ரி தான் இந்த டிரைலர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது சன் பிக்சர்ஸ்.
அதோடு, பீஸ்ட் டிரைலர் தயாராக உள்ளது. வெயிட்ட காட்டிர்லாமா நண்பா என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.