Tap to Read ➤

சிவாஜிக்கு பெருமை சேர்த்த கதா பாத்திரங்கள்/ Films that gave fame

சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. அவருக்கு பெருமை சேர்த்த பாத்திரங்கள் பற்றி பார்ப்போம்.
Filmibeat Tamil
தனது முதல்படமான பராசக்தியிலேயே சிவாஜி கணேசன் முத்திரைப் பதித்தார். அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத்தந்தது இப்படம்.
அடுத்து சிவாஜி கணேசனுக்கு பெயர் வாங்கி தந்த படம் மனோகரா. கடைசிக்காட்சியில் தந்தையுடன் வாதாடும் அரசவை காட்சி சிவாஜிக்கு பெயர் சொல்லும் பாத்திரமாக அமைந்தது.
’தூக்குத்தூக்கி’ படத்தில் சிவாஜியின் வேடத்துக்கு முதன் முதலில் பொருத்தமான பாடகரை சிவாஜி கணேசன் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார். அவர்தான் டி.எம்.எஸ்.
சிவாஜு கணேசன் வயதானவர் பாத்திரத்தில் நடித்து பேர் வாங்கிய முதல் படம் ’முதல் தேதி’. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம்.
’ராஜாராணி’-சிவாஜி கணேசன், வசனகர்த்தா கருணாநிதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி போட்டு அமைக்கப்பட்ட வசனம் நடிப்புக்காகவே சிவாஜி கணேசன் பேசப்பட்டார்.
உத்தம புத்திரன் - புகழ்பெற்ற ஹாலிவுட் படத்தை தழுவி பி.யூ.சின்னப்பா நடித்த அதே படத்தின் ரீமேக்கில் இரண்டு வேடங்களில் சிவாஜியின் ஸ்டைல் பெரிதும் ரசிக்கப்பட்ட படம்.
சபாஷ் மீனா- முழு நீள நகைச்சுவை படம் சந்திர பாபுவும், சிவாஜி கணேசனும் இணையாக நடித்த படம்.
. வீரபாண்டிய கட்டபொம்மன் - வெள்ளையரை எதிர்த்து போராடிய மன்னர்களை புத்தகத்தில் படித்தவர்களுக்கு காட்சி வடிவில் கொண்டுவந்தார் சிவாஜி. வரி, வட்டி, திறை, கிஸ்தி என்று பேசும் வசனம் சினிமாவின் கடவுள் வாழ்த்து வசனம்.
மாற்றுத்திறனாளியாகவும், அப்பாவியாகவும் நடித்த படம் பாகப்பிரிவினை. ஏன் பிறந்தாய் மகனே, தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பாடல்களால் பேசப்பட்ட படம்.
பா வரிசைப்படங்களில் புகழ்பெற்ற படம் பாவ மன்னிப்பு. மத ஒற்றுமையை வலியுறுத்திய படம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் போன்ற அருமையான பாடல்கள் நிறைந்தது.
பா.வரிசைப்படத்தில் அடுத்து வந்த படம் அண்ணன் தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக இன்றும் சொல்லப்படும் பாசமலர். சிவாஜியும், சாவித்ரியும் அண்ணன் தங்கையாக வாழ்ந்திருப்பார்கள்.
கப்பலோட்டிய தமிழன், கர்ணன், போன்ற காவியப்படங்கள் சிவாஜிக்கு பெரிதாக பேர் வாங்கித்தந்த படங்கள்.
திருவிளையாடல், கந்தன் கருணை, மகா கவி காளிதாஸ், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம் என புராணப்படங்கள் சிவாஜிக்கு பெரிய அளவில் நடிப்புக்கு தீனி போட்டன.
பார் மகளே பார், பச்சை விளக்கு, பாபு, பட்டிக்காடா பட்டணமா, ஞான ஒளி, வசந்த மாளிகை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, சாந்தி என எண்ணிக்கையில் அடங்காத படங்கள்.
ராஜராஜ சோழன் படம் சோழ மன்னனாக அந்த காலத்திலேயே அருமையாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன். அந்த கம்பீரம் இன்றும் யாருக்கும் கிடைக்காதது.
பாபு, பாரத விளாஸ், கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை,அவன் தான் மனிதன், டாக்டர் சிவா, தியாகம் எத்தனைப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது.
தங்கப்பதக்கம் இவர் பெரிய தங்கப்பதக்கம் சௌத்ரி என சொல்லும் அளவுக்கு ஒரு போலீஸ் அதிகாரியாக சிவாஜி கணேசன் முத்திரைப்பதித்த படம்.
திரிசூலம் படம் நீண்ட காலத்துக்குப்பின் 3 ரோல்களில் நடித்து வெற்றிபடமாக அமைந்தது. ரஜினியுடன் நடித்த நான் வாழவைப்பேன் படமும் பேசப்பட்டது.
சிவாஜி கணேசனுக்கு பாரத் அவார்டு கொடுக்கப்படாவிட்டாலும், அப்படி அவார்டு வாங்கியவர்கள் எல்லாம் பாடம் படிக்கக்கூடிய அளவுக்கு நடித்த படம் முதல் மரியாதை. மீனை ருசித்து சாப்பிடும் அந்த ஒரு காட்சி போதும்.
சிவாஜி ஒரு சகாப்தம், இன்று தடுக்கி விழுந்த நர்சரி பள்ளிகள் எல்லாம் தேசிய விருது பெரும்போது சிவாஜி எனும் யூனிவர்சிட்டிக்கு அது கிடைக்கவே இல்லை. காட்டுக்கு ராஜா சிங்கம் தானே. அது தனித்துவமானது என்பதால் தரவில்லை போலும்.