Tap to Read ➤

ஆங்கர் முதல் ஆக்டர் வரை...’டான்’ சிவகார்த்திகேயனின் 10 ஆண்டுகள்

சினிமாவில் வாரிசு பின்புலம் இல்லாமல் வந்த பிரபலங்களில் ரஜினி, அஜித் வரிசையில் வந்த நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளார்.
தமிழ் திரையுலகில் வாரிசு பின்புலம் இல்லாமல் வந்த பிரபல நடிகர்கள் வெகுசிலரே. ரஜினிகாந்த், அஜீத் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார்
மிமிக்ரி திறமையால் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த சிவகார்திகேயன், ஆரம்ப காலத்தில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து தருவது பின்னர் தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ஆங்கரானார்
இயல்பாகவே நகைச்சுவை உணர்ச்சி மிக்க சிவகார்த்திகேயன் கூடவே அவருடைய மிமிக்ரி திறமையும் சேர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது
காவல்துறையில் பணியாற்றிய தந்தையின் திடீர் மரணம் சிவகார்த்திகேயன் குடும்பத்தை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளியது
2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது ’மெரினா’ என்கிற படம் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் சிவகார்த்திகேயன்
அதே ஆண்டில் தனுஷுடன் நண்பர் ரோலில் ’3’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஐஸ்வர்யா டைரக்ட் செய்த படம். இந்த படத்தில் தனுஷின் பள்ளி தோழனாக வரும் சிவகார்த்திகேயனின் நகைச்சுவை மிக சிறப்பாக இருக்கும்
அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும். இதற்கு பின் ’மனங்கொத்தி பறவை’ என்ற படத்தில் நடித்தார். 2012 ஆம் ஆண்டில் இந்த மூன்று படங்களும் சிவகார்த்திகேயன் என்ற இளம் நடிகரை ரசிகர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியது
2013 ஆம் ஆண்டு ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தந்தை சென்டிமென்ட் படத்தின் முதல் படமாகும். இதில் வரும் ’தெய்வங்கள் எல்லாம்’ என்கிற பாடல் இன்றுவரை தந்தை சென்டிமென்ட் பாடலாக உள்ளது
அதே ஆண்டில் ’எதிர்நீச்சல்’ ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்களில் நடித்தார். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. தமிழகம் முழுவதும் பி, சி ஆடியன்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்தார்
2014 ஆம் ஆண்டும் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்தது ’ரஜினிமுருகன்’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கலக்கினார். இதிலும் அவருடைய காமெடி கலந்த நடிப்பு மக்களை பெரிதும் கவர்ந்தது
’ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகியை கவர இளம் வயது நர்ஸ் போல் வேடமிட்டு நடித்த இந்த படம் மிகச்சிறப்பாக அமைந்தது. பெண்ணாகவே மாறிப்போனார் சிவகார்த்திகேயன்
பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது தங்கையாக நடித்து இருப்பார்
கடந்த ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடித்த ’டாக்டர்’ படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக நல்ல பெயரை பெற்று தந்தது
இந்த வரிசையில் இந்த ஆண்டு டான் படம் வெளியாகியுள்ளது. மீண்டும் ஒரு தந்தை சென்டிமென்டை விளக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது
கடந்த 10 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளார்.சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் பாடலையும் எழுதியுள்ளார்.
ரஜினிகாந்தின் அடுத்த படமான ’தலைவர் 169’ படத்திலும் நடிக்க உள்ளார். திரைத்துறையில் பத்தாண்டு காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும், பி & சி ஆடியன்ஸ்கள் மத்தியில் பெருத்த வரவேற்பையும் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன்
திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பே 2010 ஆம் ஆண்டே சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை மணந்தார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன
பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்த பத்து ஆண்டுகளில் இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என தெரிகிறது