Tap to Read ➤

ராசய்யா முதல் டாக்டர் இளையராஜா வரை..இசையின் பயணம்

தேனி பண்ணைபுரத்தில் பிறந்த ராசய்யா தன் இசைத்திறைமையால் இசைஞானியாகி, ராஜ்யசபா எம்பி- ஆகி பிரதமர் கையால் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Filmibeat Tamil
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் இசையுலகில் காலடி எடுத்து வைத்த இளையராஜாவின் சாதனை உலகெங்கும் உள்ள மக்களால் ரசிக்கப்படுகிறது
ஆரம்பத்தில் கம்யூனிச மேடைகளில் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் பெண் குரலில் பாடிக்கொண்டிருந்த இளையராஜாவுக்கு இசையின் மீது தானாக ஈர்ப்பு வந்தது.
ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர் இளையராஜா. 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டவர்
1969 ஆம் ஆண்டு தன் 26 ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணி கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார்
லண்டனின் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் தொலைதூர கற்றல் சேனல் மூலம் பாடநெறியை முடித்த பின்னர் பாரம்பரிய கிதாரில் தங்கப்பதக்கம் வென்றார். டி.வி.கோபாலகிருஷ்ணனிடமிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார்
கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக சேர்ந்தார், அங்குதான் இளையராஜாவின் திரையுலக இசைப்பயணம் முறையாக தொடங்கியது
ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக, இளையராஜா ஆர்கெஸ்ட்ரேட் முறையில் தேறினார். இந்தக்காலக்கட்டத்தில் இளையராஜா தனது சொந்த இசைக்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். அதை வெங்கடேஷ் பயன்படுத்தினார்
1970 முதல் இளையராஜா, மலேரியா இன்ஸ்பெக்டராக இருந்த பாரதிராஜா, எஸ்.பி.பி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எஸ்.பி.பி மேடைக்கச்சேரிகளில் இளையராஜா, அமரன் ஆகியோர் வாசித்தது உண்டு.
பின்னர் இளையராஜா மிகப்பெரும் இசையமைப்பாளராகவும், எஸ்.பி.பி மிகப்பெரும் பாடகராகவும், பாரதிராஜா இயக்குநர் இமயமாகவும் மாறினர்
1975 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னக்கிளி தமிழ் திரையுலகில் வித்தியாசமான சாதனையை படைத்தது
1980 களில் வேகமாக ஓடத்தொடங்கிய பண்ணைபுரம் எக்ஸ்பிரசின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 2000 வது ஆண்டுவரை புயல் வேகத்தில் பயணித்தது
இளையராஜா 5 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர பத்ம பூஷண், பத்ம விபூஷண் பட்டங்களை பெற்றுள்ளார். இந்திய அளவில் பின்னணி இசைக்காக மிகவும் மதிக்கப்பட்டவர் இளையராஜா. அவரளவிற்கு வேகமாக யாரும் இசையமைக்க முடியாது
தமிழில் முதல் ஸ்டீரியோ இசையை பிரியா படத்திலும், விக்ரம் படத்தில் புதுவித நவீன இசை வடிவங்களையும், புன்னகை மன்னன், அஞ்சலி, அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் வித்தியாசமான இசையை வழங்கியவர் இளையராஜா
இளையராஜா இசைப்பள்ளியின் மாணவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், கார்த்தில் உள்ளிட்டோர் இளையராஜாவின் குழுவில் பணியாற்றியவர்கள். இன்னும் அநேகர் துரோணர் பள்ளி ஏகலைவன்களாக உள்ளனர்
இளையராஜா 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் தமிழ் பட உலகம் மட்டுமல்ல தென் இந்திய, மேற்கத்திய உலகையும் கட்டிப்போட்டுள்ளார்
காற்றுள்ளளவும்..இசை கேட்கும் இதயங்கள் உள்ளளவும் வாழும் இசை காற்றுள்ளளவும், காற்றில் இசை உள்ளளவும் இளையராஜாவின் கான கீதங்கள் நம்மை தழுவிக்கொண்டே இருக்கும்
பண்ணைபுர ராசய்யாவை ராஜ்ய சபா உறுப்பினராக்கியதன் மூலம் அப்பதவி பெருமை கொள்கிறது. அதே நேரம் பிரதமர் மூலம் அவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது