டிசம்பர் 02ல் தமிழில் வெளியான கட்டா குஸ்தி குட்டி விமர்சனம் இங்கு உள்ளது
Sakthi Harinath M
விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் டிசம்பர் 02ல் வெளியான திரைப்படம், கட்டா குஸ்தி
சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தினை இயக்கிய செல்லா அய்யாவு இப்படத்தினை இயக்கியுள்ளார்
கட்டா குஸ்தி படத்தின் ஒன்லைன்
ஸ்போர்ட்ஸ் விளையாடும் பெண்கள் எதிராளியை ஜெயிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தையும் புருஷனையும் ஜெயிக்க வேண்டும்
விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா லட்சுமி இருவருமே நடிப்பில் மாற்றி மாற்றி ஸ்கோர் செய்கின்றனர்.
இந்த படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்டாகவும் கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு சிக்கல்களையும் அழகாக கையாண்டுள்ளது படத்திற்கு பெரிய பலமாக மாறி உள்ளது.
இந்த மாதிரி கதை இதுக்கு முன்னாடி வந்திருக்கு.. ஆனால், இது தான் ஃபர்ஸ்ட் டைம் என்று சொல்கிற அளவுக்கு கதை தொடங்கும்
இப்படத்தின் பாடல்கள் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
படத்தில் பாடல்கள் இடம்பெற்ற காட்சிகள் சற்று சொதப்பல்
கட்டா குஸ்தி - குடும்பத்துடன் ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்