Tap to Read ➤

கூகுள் குட்டப்பா ட்ரெய்லர் வெளியீடு

ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் கதையை கே.எஸ்.ரவிகுமாரின் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்கிற பெயரில் உருவாக்கியுள்ளனர்.
கே எஸ் ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ ட்ரைலர் வெளியீடு நடந்தது. விக்ரமன் வெளியிட ரோபோட் பெற்றுக்கொண்டது.
திரையுலகில் முதன்முறையாக ரோபோட் ஒன்று மேடையில் ட்ரெய்லரை வெளியிட்ட நிகழ்வு சென்னையில் நடந்தது. ரோபோட்டை கைப்பிடித்து அழைத்து வந்து மேடையில் நடனமும் ஆட வைத்தார் கே.எஸ்.ஆர்.
கூகுள் குட்டப்பா ட்ரெய்லர் நிகழ்ச்சியில் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் கலந்துக்கொண்டனர்.
கூகுள் குட்டப்பா திரைப்படம் மளையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படத்தின் தழுவலாகும். கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்க அவரிடம் பணியாற்றியவர்களே படத்தை இயக்கியுள்ளனர்.
இந்தப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
’கூகுள் குட்டப்பா’ படத்தின் கதாநாயகியாக பிக்பாஸ் புகழ் லோஸ்லியா இலங்கைப்பெண் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் சுரேஷ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனது தாயார் சுரேஷ் மேனனின் ரசிகை என தர்ஷன் குறிப்பிட்டார்.
’ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’படத்தின் கதையை கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குநர்கள் சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோர் சொன்னபோது தானே தயாரிப்பதாக கே.எஸ்.ரவிகுமார் கூறி முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கூகுள் குட்டப்பா படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளம் இயக்குநர்கள் என்கிற கவுரவம் பார்க்காமல் சிறப்பாக நடித்ததாக கே.எஸ்.ரவிகுமார் பாராட்டினார்.