Tap to Read ➤

83வது பிறந்தநாள் காணும் நகைச்சுவை மன்னர் கவுண்டமணி

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணி இன்று 25 மே 2022ல் 83வது பிறந்தநாள் கொண்டாடுகிறார், இவரை பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
சுப்பிரமணியன் கருப்பையன் என்ற இயற்பெயரினை கொண்டு திரையுலகிற்குள் அறிமுகமான இவர், திரையுலகில் பெற்ற புகழின் அடையாளமாய் இவர் கவுண்டமணி என்று அனைவராலும் அறியப்பட்டார்.
கவுண்டமணி 1964-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையில் பிரபல நகைச்சுவையாளராக அனைவராலும் கௌரவிக்கப்பட்டார்
கவுண்டமணி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் 1939 - மே 25-ல் பிறந்தார்.
அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார்.
கவுண்டமணி துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர்.
கவுண்டமணி, இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
நடிகர் கவுண்டமணி-யின் நகைச்சுவை திறனை பாராட்டி பல திரையுலக சார்ந்த அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை அளித்து இவரை கௌரவ படுத்தியுள்ளது.
இன்று 25 மே 2022ல் 83வது பிறந்தநாள் கொண்டாடுகிறார், கவுண்டமணி.
கவுண்டமணி நடித்த தமிழ் திரைப்படங்கள்
திரைப்படங்கள்