Tap to Read ➤

நயன்தாரா பிறந்த நாள்..சர்ச்சைகளை கடந்து உச்சம் தொட்ட நாயகி

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் தற்போது பாலிவுட் என உச்ச நடிகையாக இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் இன்றும் அதிக சம்பவளம் வாங்கும் நடிகை நயன் தான்.
Filmibeat Tamil
டயானா மரியா குரியனான நயன் 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் ’மனசினகாரே’ திரைப்படத்திலேயே நடிகர் ஜெயராமுடன் நாயகியாக அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு தமிழில் ’ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் என குண்டு முகத்துடன் லட்சணமாக அறிமுகமான நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
அவரது லக் இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் குறுகிய காலத்தில் திரும்பிப்பார்க்க வைத்தார் நயன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் குறுகிய காலத்தில் நடித்ததால் தென் இந்தியா முழுவதும் நயன் புகழ் பரவியது.
2006 ஆம் ஆண்டு விஜய்யின் சிவகாசி படத்தில் ஒரு பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் நாயகியை விட நயன் இருக்கிறார் என பேசினர்.
கஜினி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த அவருக்கு திருப்புமுனை மீண்டும் சிவாஜி படத்தில் கிடைத்தது. அதே ஆண்டில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்போதே சர்ச்சை அவரைச் சுற்றி ஆரம்பமானது.
2007 ஆம் ஆண்டு அஜித்துடன் பில்லா படத்தில் நடித்தார். இதன்மூலம் தமிழில் ஸ்டார் அந்தஸ்து நடிகரானார். அடுத்த ஆண்டு தனுஷுடன் யாரடி நீ மோகினி, குசேலன், ஏகன் படத்தில் நடித்தார்.
2009 ஆம் ஆண்டு விஜய்யுடன் வில்லு படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் முன்னணி நாயகர்களின் ஹீரோயின் ஆனார் நயன். அதே ஆண்டில் சூர்யாவுடன் மீண்டும் ஆதவன் படத்தில் இணைந்தார்.
தொடர்ந்து மீண்டும் பிரபுதேவாவுடன் பழகுகிறார் என்கிற சர்ச்சையில் சிக்கினார். இதனால் 2 ஆண்டுகள் படபிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.
2013 ஆம் ஆண்டு அவர் நட்பை முறித்தப்பின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத்தொடங்கிய நயன் நாட் அவுட் நாயகியாக தொடர்கிறார். ராஜாராணி, அஜித்துடன் மீண்டும் ஆரம்பம், எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டில் உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதல் 2015 ஆம் தனி ஒருவன், நண்பேண்டா போன்ற படங்களும், நானும் ரவுடிதான் என்கிற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். இந்தப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.
2017 ஆம் ஆண்டு நயனை முன்னிலைப்படுத்தி நாயகி கதையான அறம் அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியது. மிகப்பெரிய அளவில் அழுத்தமான ரோல்களை அவரால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.
2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படமும் 2019 ஆம் ஆண்டு அஜித்துடன் விசுவாசம், அதே ஆண்டில் விஜய்யுடன் பிகில், சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் என பிசியாக வளம் வந்தார்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அம்மனாக மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ரஜினியுடன் தர்பார் படத்தில் ஜோடியாக நடித்தார். 2021 ஆம் ஆண்டு ரஜினியுடன் மீண்டும் அண்ணாத்த படத்தில் நடித்தார்.
2022 ஆம் ஆண்டு நயன் விக்னேஷ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். அக்டோபரில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றதாக அறிவித்தனர். இது ஆரம்பத்தில் சர்ச்சை ஆனாலும் அவர் தரப்பில் விதிமீறல் இல்லை என உறுதியானது.
சர்ச்சைகள் பல கடந்தாலும் திரும்பிப்பார்க்காமல் லேடி சூப்பர் ஸ்டாராக ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நடித்து பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.