Tap to Read ➤

ஹாலிவுட் ஜாம்பவான் புரூஸ் வில்லீஸ்

67 வயதிலும் ஹாலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வரும் புரூஸ் வில்லீஸை அபேசியா எனப்படும் மூளையைத்தாக்கும் நோயால் அவதிப்படுவதால் பட உலகிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புரூஸ் வில்லீஸ் 1955 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். (அப்போது அது மேற்கு ஜெர்மனி) தாய் ஜெர்மானியர், தந்தை அமெரிக்கர்.ராணுவ அதிகாரி.
ப்ரூஸ் பள்ளிபருவத்தில் திக்குவாய், அவரை பக்,பக் என அழைப்பார்கள். பின்னர் அவர் பள்ளி நாடகக்குழுவில் சேர்ந்தப்பின் திக்குவாய் சரியானது. பள்ளி மாணவர் தலைவரும் ஆனார்.
பள்ளிப்படிப்பை முடித்தப்பின் செக்யூரிட்டி கார்டாகவும், ஓட்டுநராகவும், மதுக்கடை ஊழியராகவும் பணியாற்றியுள்ளார்.
முதன் முதலில் 1985 ஆம் ஆண்டு மூன் லைட்டிங் என்கிற டிவி சீரிஸில் நடிக்க தேர்வானார். அவருடன் போட்டியிட்டவர்கள் 3000 பேர்.
4 ஆண்டுகள் மூன்லைட்டிங் சீரிஸில் நடித்தார். கோல்டன் குளோப் விருதையும் வென்றார். இதேபோல் சிறந்த நடிகருக்கான எம்மி விருதையும் பெற்றார்.
1987 ஆம் ஆண்டு டெமி மூர் என்கிற பிரபல் நடிகையை மணந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். 2000 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
1988 ஆம் ஆண்டு தன்னுடைய 33 வது வயதில் டை ஹார்ட் (Die Hard) படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து புகழ்பெற்றார். டை ஹார்டு உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.
அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு டை ஹார்ட்-2 (Die Hard-2) படமும், 1995 ஆம் ஆண்டு டை ஹார்ட்-3 (Die Hard-3) படமும் வெளியாகி புரூஸுக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
அமெரிக்க ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படம் டை ஹார்ட் (Die Hard) 3 பாகங்கள். டை ஹார்ட் 1.3 மில்லியன் டாலர் வசூல் வந்த நிலையில் மற்ற 2 பாகங்கள் சேர்த்து மொத்த வசூல் 700 மில்லியன் டாலர்.
டைஹார்ட் 3 பாகங்கள் தவிர தி போனோஃபைர் ஆஃப் தி வானிடீஸ் (The Bonfire of the Vanities -1990) ஹட்சன் ஹாக் (Hudson Hawk -1991) படங்களின் வெற்றி புரூஸ் வில்லீஸை ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார் ஆக்கியது.
இது தவிர குஹன்டீன் டாரண்டினோஸ் அக்ளெய்ம்ட் பல்ப் ஃபிக்‌ஷன் (Quentin Tarantino's acclaimed Pulp Fiction) 3 பாகங்கள் படம் சிறப்பாக ஓடியது. 1998 ஆம் ஆண்டு புரூஸ் நடித்த ஆர்மகாடன் (Armageddon) படம் உலக அளவில் வெற்றிப்படமானது.
2001 ஆம் ஆண்டு ஃபிரண்ட்ஸ் சீரிஸ் (Friends series) காமெடி டிவி சீரிஸ் மூலம் அந்த ஆண்டுக்கான நகைச்சுவை நடிகர் விருது கிடைத்தது.
2000 ஆம் ஆண்டில் திருமண வாழ்வில் தோல்வி அடைந்த நேரத்தில் தனக்கு மிகவும் உதவியாக நடிகர் வில் ஸ்மித் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டி பிரபல மாடல் அழகி ஹெம்மா ஹெமிங்கை மணந்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது புரூஸ் வில்லீஸ் அபாஸியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் சினிமா படபிடிப்பில் துப்பாக்கி சுடும் காட்சியில் தவறுதலாக சுட்டுள்ளார். அப்போதே படக்குழுவினர் சந்தேகப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புரூஸுக்கு ஏற்பட்டுள்ள அபாஸியா நோய் காரணமாக அவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
67 வயதிலும் ஹாலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வரும் புரூஸ் வில்லீஸை ஹாலிவுட் உலகம் இழந்துள்ளது. ஆனாலும் Fortress: Sniper's Eye, Vendetta, The Wrong Place,Die Like Lovers,Corrective Measures,White Elephant,Paradise City,Wire Room 8 படங்கள் வெளிவர உள்ளது.