Tap to Read ➤

நீங்கள் மிஸ் பண்ண விரும்பாத ஹாலிவுட் இயக்குநர்கள்-Part 3

ஹாலிவுட்டின் ராம்கோபால் வர்மா என அழைக்கப்ப்டுபவர் குயிண்டன் டேரன்டினோ கமல்ஹாசனுக்கு பிடித்த இயக்குநர். அவருக்கும் கமல் ஹாசனை மிகவும் பிடிக்கும்.
உலகைக் கலக்கிய ஹாலிவுட் இயக்குநர்கள் குறித்த வரிசையில் அடுத்து பார்க்கப்போவது குயிண்டன் டேரன்டினோ பற்றி.
அமெரிக்கரான குயிண்டன் டேரன்டினோ இயக்குநர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். எடுத்த படங்களில் முக்கியமானது கில்பில் சீரீஸ் படங்கள் ஆகும்.
குயிண்டன் டேரன்டினோ ஹாலிவுட்டின் ராம் கோபால் வர்மா எனலாம். அந்த அளவுக்கு அவரது படங்களில் ரத்தம், வன்முறைக்காட்சிகள் இருக்கும். இதுகுறித்து கேட்டபோது அப்படி இல்லாமல் படம் எடுத்தால் என்ன சுவாரஸ்யம் இருக்கும் எனக்கேட்டுள்ளார்.
இவர் கமல் ஹாசனுக்கு பிடித்த இயக்குநர், அதேபோல் அவருக்கும் கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். ஆளவந்தான் படத்தில் கமல் உபயோகப்படுத்திய கார்ட்டூன் டைப் வன்முறை காட்சிகளை பார்த்து அவர் படமான கில்பில் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.
கில்பில் இரண்டு பாகங்கள் வெளியாகி இந்தியாவில் குயிண்டன் டேரன்டினோவை பிரபல படுத்தியது. இதன் பின்னர் அவரது பல்ப் ஃபிக்‌ஷனும் இந்தியாவில் பிரபலமானது.
அதற்கு பின்னர் இன்க்ளொரியஸ் பாஸ்டர்ட்ஸ் என்கிற படம் 2 ஆம் உலகப்போரில் நாஜிக்களின் ராணுவத்தை துவம்சம் செய்யும் விதமாக எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆங்கிலப்படங்களில் அடிக்கடி பேசப்படும் ஜாங்கோ பட வரிசையில் ஜாங்கோ அன்செயினுட் என்கிற படத்தை எடுத்தார். இதில் டிகார்பியோ நடித்திருப்பார்.
அடுத்து ரியல் பாலிவுட் பற்றி எடுக்கப்பட்ட ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹலிவுட் படம் 1970 களில் நடப்பதுபோன்று எடுக்கப்பட்ட படம். பெரும் வரவேற்பை பெற்றது. டிகார்பியோ, பிராட்ஃபிட் போன்றோர் நடித்திருந்தனர்.
ப்ரூஸ்லி வந்தப்பின்னர் பல ஹாலிவுட் நடிகர்கள் துண்டக்காணோம் துணியக்காணோம் என்று ஓடிய கதையை கூறும் படம் இது. இதில் ப்ரூஸ்லி கேரக்டரில் ஒருவர் வருவார்.
இந்தப்படத்தில் புரூஸ்லி ஹீரோ பிராட்பிட்டை வம்பிழுத்து அடி வாங்குவதுபோல் காண்பித்திருப்பார். இதை புரூஸ்லீயின் மகள் ஷானன் லீ கண்டித்திருந்தார்.
குயிண்டன் டேரன்டினோவை 34 முறை ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டு 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.