Tap to Read ➤

நீங்கள் மிஸ் பண்ண விரும்பாத ஹாலிவுட் இயக்குநர்கள்-Part 4

ஹாலிவுட்டின் பாரதிராஜா, பாலச்சந்தர், டி.ராமாராவ் என சொல்லும் வகையில் மிகவும் முதுபெரும் இயக்குநர் மார்டின் கொர்சேசி. இவரது படங்கள் 91 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 20 விருதுகளை பெற்றுள்ளது.
உலகைக் கலக்கிய ஹாலிவுட் இயக்குநர்கள் குறித்த வரிசையில் அடுத்து பார்க்கப்போவது மார்டின் கொர்சேசி பற்றி.
அமெரிக்கரான மார்டின் கொர்சேசி ஒரு பழம்பெரும் இயக்குநர் எனலாம். 1960 களில் படம் எடுக்க ஆரம்பித்து 2019 ஆம் ஆண்டுவரை படம் எடுத்துள்ளார். இன்னும் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.
இயக்குநர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்காவில் பிறந்தாலும் இத்தாலி குடியுரிமையையும் பெற்றவர்.
எடுத்த படங்களில் முக்கியமானது 1970 களில் பிரபலமாக பேசப்பட்ட டாக்சி டிரைவர் படம் முதல் குட் ஃபெல்லாஸ், தலாய்லாமா வாழ்க்கையை சித்தரிக்கும் குன்டுன் ஏவியேட்டர், டிபார்ட்டர், ஷட்டர் ஐலேண்ட் போன்றவை முக்கிய படங்கள் ஆகும்.
இவரது படங்கள் பெரும்பாலும் சைக்கோ திரில்லர் படங்கள், கேங்ஸ்டர் படங்களாக இருக்கும். ராபர்ட் டினிரோ, டிகார்பியோ, நிக்கலோஸ் கேஜ் உள்ளிட்டோர் இஅவர் படங்களில் முக்கிய ஹீரோக்களாக நடித்துள்ளனர்.
படங்களுக்கு ஸ்க்ரீன் ப்ளே அமைப்பதில் இவர் முன்னோடி. இவர் இயக்கும் படம் எவ்வளவு மெதுவாக சென்றாலும் இறுதியில் வேகமெடுத்து முடித்து வைப்பார். இதற்கு ஐரிஷ்மேன் படம் சிறந்த உதாரணம். .
ஐரிஷ்மேன் என்கிற படம் 2019-ல் கடைசியாக வெளிவந்த படம் 3 மணி நேரம் 28 நிமிடம் ஓடும் படம். ஹாலிவுட்டின் நீளமான படம் இதுவாகத்தான் இருக்கும். நெட்ஃபிலிக்ஸில் நேரடியாக ஒளிபரப்பான படம். 80 வயதை கடந்த அந்தகால கேங்ஸ்டர் ஹீரோக்களை வைத்து கலக்கியிருப்பார்.
2002 ஆம் ஆண்டு வெளியான ’கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’ படத்தில் டைட்டானிக் ஹீரோ டிகார்பியோ நடித்திருப்பார். இந்தப்படம் 1862 நடந்த கதோலிக்-ப்ராடஸ்டண்ட் மோதல் வன்முறையாக மாறுவது குறித்த படம்.
2004 ஆண்டு வெளியான ஏவியேட்டர் படம் உலகம் முழுவது ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்தப்படத்திலும் டிகார்பியோ நடித்திருப்பார். இந்தப்படம் 5 ஆஸ்கர் அவார்டுகளை அள்ளியது.
2006 ஆம் ஆண்டு டிபார்டட் எனும் படம் இயக்கினார். இந்தப்படத்திலும் டி கார்பியோ நடித்திருப்பார். இது ஆஸ்கர் அவார்டுக்கு 5 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதுகளை அள்ளியது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது.
2011 ஆம் ஆண்டு வெளியான ஹியூகோ அட்வெஞ்சர் படம் ஆஸ்கருக்கான 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை அள்ளியது. இதுவரை இவரது படங்கள் 91 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 20 விருதுகளை பெற்றுள்ளது.