Tap to Read ➤

நீங்கள் மிஸ் பண்ண விரும்பாத ஹாலிவுட் இயக்குநர்கள்

hollywood best directers you never missed part 2
உலகைக் கலக்கிய ஹாலிவுட் இயக்குநர்கள் குறித்த வரிசையில் அடுத்து பார்க்கப்போவது கிரிஸ்டோபர் நோலன் பற்றி.
பிரிட்டீஷ் அமெரிக்கரான கிரிஸ்டோபர் நோலன் எடுத்த படங்களில் முக்கியமானது பேட்மேன் சீரீஸ் படங்கள் ஆகும். 2005, 2008, 2012 ஆண்டுகளில் 3 பாகம் வெளியானது.
டார்க் நைட் எனப்படும் பேட்மேன் சீரீஸ் படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. சமீபத்தில் வெளிவந்த பேட்மேன் படத்தை நோலன் இயக்கவில்லை, ஆனால் பேட்மேனை பிரபலப்படுத்தியவர் நோலன்.
டார்க் நைட் எனப்படும் பேட்மேன் சீரீஸ் படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. சமீபத்தில் வெளிவந்த பேட்மேன் படத்தை நோலன் இயக்கவில்லை
கிரிஸ்டோபர் நோலன் 2012 ஆம் ஆண்டுக்குப்பின் பேட்மேன் கதையை எடுக்கவில்லை. பேட்மேன் படத்தில் இவர் அறிமுகப்படுத்திய ஜோக்கர் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று.
கிரிஸ்டோபர் நோலன் சைகாலஜிகல் திரில்லர், சயின்ஸ் ஃபிக்‌ஷன், டைம் மெஷின் படங்களை எடுப்பதில் வல்லவர். அவர் எடுத்த இன்சோம்னியா என்கிற படம் ராபின் வில்லியம்ஸ் நடிப்பால் மெருகேறியது.
அடுத்து டைட்டானிக் ஹீரோ டிகார்பியோவை வைத்து எடுத்த இன்செப்ஷன் என்கிற படம் கனவு, கனவுக்குள் கனவு, அந்த கனவுக்குள் கனவு என சலூன் கடை கண்ணாடியின் உருவம் போல் நீளும் சிக்கலான கதை, அதை குழப்பம் இல்லாமல் எடுத்திருப்பார்.
உலகமே இதுவரை பிளாக் ஹோல் பற்றி சிந்தனை செய்யும் நேரத்தில் அதுகுறித்து அவர் எடுத்த இன்டெர்ஸ்டெல்லர் படம் புதிய முறையில் அணுகியது. நம் விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்ட ஒலிவேகம் கடந்த பிளாக் ஹோல் பற்றிய படம்.
பிளாக் ஹோல் குறித்து எடுக்கப்பட்ட படம். கிட்டதட்ட தேவலோகம் பூமி போன்ற கான்செப்ட். பிளாக் ஹோல் உள்ளே செல்பவர் செலவழிக்கும் சில மணி நேரம் பூமியில் பல பத்தாண்டுகளுக்கு சமானம். ஹீரோ பூமிக்கு திரும்பும் போது அவரது மகள் மூதாட்டியாக படுக்கையில் கிடப்பார்.
அடுத்து 2020 ஆம் ஆண்டு எடுத்த படம் டெனெட். இதுவும் டைம் மிஷின் சம்பந்தப்பட்ட படமே. இதில் முன் பின் காலங்களில் ஹீரோ பயணிப்பார்.
கிரிஸ்டோபர் நோலன் படங்களை பார்க்க தனிப்பட்ட அறிவியல் பூர்வமான முதிர்ச்சியான ரசிப்புத்தன்மை வேண்டும். இதனாலேயே இவர் ஆஸ்கர் பரிசுகளை அள்ளினார்.
நோலன் 1998 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 11 படங்களை இயக்கியுள்ளார். 2023 ஆம் ஆண்டு அவரது புதிய படம் வர உள்ளது. இதுவரை இவரது படங்கள் 36 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 ஆஸ்கர் அவார்டுகளை வென்றுள்ளார்.