Tap to Read ➤

விருமன் - ஆகஸ்ட் 12 முதல் திரையரங்குகளில்

கார்த்தி - அதிதி ஷங்கர் என பலர் நடிப்பில் 2022, ஆகஸ்ட் 12ல் உலகம் முழுவதும் வெளியாகும் விருமன் பற்றிய தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
கொம்பன் படத்திற்கு பின்னர் கார்த்தி - முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம்.
விருமன்
கார்த்தி-யின் சகோதரர் மற்றும் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகரான சூர்யா தனது 2D தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
கார்த்தியின் முந்திய படமான சுல்தான் படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா, விருமன் படத்திற்கு இவரே முழுவதுமாக இசையமைத்துள்ளார்.
விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் 2022, ஆகஸ்ட் 12ல் சுதந்திர தின ஸ்பெஷல் படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், விருமன் படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் இவர் மதுரை வீரன் என்ற பாடலும் யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பாடியுள்ளார்.
விருமன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பட்டை கிளப்பி வருகிறது.
கொம்பன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அதே கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளதால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது, விருமன்.
விருமன் படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ஆர் கே சுரேஷ் என திரை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்
விருமன் முழு தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up