Tap to Read ➤

இயற்கை மூவி காதல் என்றால் சொல்லியனுப்பு..தனித்துவமான படத்தின் 19 ஆண்டு

தமிழ் திரையுலகில் மிகவும் வித்தியாசமான கதையமைப்பு, கேமரா, படமாக்கப்பட்ட விதம், பாடல்கள் என அனைவராலும் ரசிக்கப்பட்ட படம் இயற்கை. இந்தப்படம் வந்து 19 ஆண்டுகள் ஆகிறது.
Filmibeat Tamil
நடிகர் ஷாம், அருண்விஜய் நடித்து 19 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் இயற்கை. மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான படம்.
முக்கோண காதலை பல படங்கள் சொல்லியிருந்தாலும் இந்தப்படத்தில் மிக வித்தியாசமாக சொல்லியிருப்பார்கள். அருண்விஜய், ஷாம், குட்டி ராதிகா இடையே நடக்கும் மெல்லிய காதல் உணர்வுதான் கதை.
இயற்கை படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்படம் இன்றும் பேசப்பட்டு வருவதற்கு காரணம் படத்தின் நாயகன் ஷாமின் துள்ளல் நடிப்பும், குட்டி ராதிகாவின் அப்பாவித்தனமும்.
படத்தின் மூலக்கதை ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவலான வெண்ணிற இரவுகள் கதையை தழுவி எடுக்கப்ப்ட்டது. இது ஒரு முக்கோண காதலை அழகாக சொல்லும் கதை.
கப்பல் மாலுமியாக ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வரும் நாயகன் ஷாமின் கண்ணில் துருதுருவென இருக்கும் குட்டி ராதிகா கண்ணில் பட மனதை பறிகொடுத்து விடுகிறார்.
துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் உணவு பொருட்களை விற்கும் பணியை செய்துவரும் குட்டி ராதிகா உணவு விடுதி நடத்தும் பிபாசா பாசுவின் ஆதரவில் வளர்ந்து வருபவர்.
அவரை சுற்றி சுற்றி காதலிக்கிறார் ஷாம். ஆனால் ஒதுங்கி ஒதுங்கி போகிறார் குட்டி ராதிகா. இதில் நடக்கும் சுவார்ஸ்யமான நிகழ்வுகள் அருமையாக இருக்கும்.
ஷாம் துள்ளலாக விரட்டி விரட்டி காதலிப்பதாகட்டும், அவர் வேறு ஒருவரை காதலிக்கிறார் என தெரிந்தவுடன் அதற்காக மதிப்பு கொடுத்து காதலனை தேடும் முனைப்பில் ஜென்டில்மேனாக இருப்பார்.
ஷாம் பாடும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் படமாக்கப்பட்ட விதம், கடலை, கடற்கரையை இவ்வளவு அழகாக காட்டமுடியுமா? என பிரம்மிக்க வைத்திருப்பார் கேமரா மேன் என்.கே.ஏகாம்பரம்.
படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகரின் அருமையான இசையில் முத்து முத்தான பாடல்கள், அதற்கு ஏற்ப நடனம், கேமரா கண்களின் ஆதிக்கம் என படம் பிரம்மிக்க வைத்தது.
தான் காதலித்த கப்பல் கேப்டன் அருண்விஜய் விபத்தில் இறந்துபோனார் என்று தெரிந்தப்பின் ஷாமை காதலிக்க ஆரம்பிக்கிறார் குட்டி ராதிகா. ஆனால் அங்குதான் ட்விஸ்ட் வருகிறது.
காதலை சொல்லும் நேரத்தில் பழைய காதலன் வருகிறார், காதலிக்கு சங்கடம் வர வேண்டாம் என ஷாம் அழகாக ஒதுங்கும் காட்சி மிகச்சிறப்பான முடிவு.
இந்தப்படம் சிறந்த மாநில மொழிப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது. காலங்கள் கடந்தாலும் இந்தப்படத்தின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. அதன் பின்னர் இப்படி ஒரு படமும் வரவில்லை என்பது இப்படத்தின் தனிச்சிறப்பு.