Tap to Read ➤

நெஞ்சை கனக்க செய்த ஜெய்பீம் மூவி.. ஓராண்டு நிறைவு

ஆஸ்கர் தேர்வாளரையே பிரமிக்க வைத்த ஜெய்பீம் மூவி. எளிய மக்களின் சட்டப்போராட்டத்தை அழகாக பதிவு செய்து அனைவரையும் கவர்ந்த ஜெய்பீம் படம் வெளியாகி ஓராண்டு ஆகிறது.
Filmibeat Tamil
சட்டம் நியாயம் சாமானியருக்கு அல்ல என்பதை பொய்யென நிரூபித்த நிஜ சம்பவத்தை கதையாக்கி காட்டியது ஜெய்பீம் படம். நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் சூர்யா-ஜோதிகாவுக்கு இது ஒரு திருப்புமுனை படம்
ஜெய்பீம் மூவி, முதல்வர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரையும் நெகிழ வைத்தது. ”படத்தை பார்த்த என் மனதில் நெடுநேரம் அழுத்தமாக இருந்தது” என ஸ்டாலின் அப்போது பதிவிட்டிருந்தார்.
ஜெய்பீம் வெறும் திரைப்படமல்ல, அது சாமானிய மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை நிஜ சம்பவ பின்னனி அடிப்படையில் சொன்னது. ஒரு வழக்கறிஞர் சட்டத்தின் மூலம் போராடி நியாயத்தை பெற்றுத்தரமுடியும் என்பதை நம்பிக்கையாக சொன்னது
அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாமல், லாக்கப்பில் கொல்லப்பட்ட தனது கணவனுக்காக, ஏழு வயது மகளுடன் பாதிக்கப்பட்ட பெண் நடத்தும் சட்டபோராட்டம் பார்ப்போர் கண்ணில் நீரை வரவழைக்கும்
இந்தப்படத்தில் பாதிக்கப்பட்டதாக காட்டப்படும் பாத்திரங்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டிருப்பது படத்தை மேலும் உணர்வுடன் பார்க்கும் ஆர்வத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்தியது. நடிகர் சூர்யா உணர்ச்சிகரமான வக்கீலாக அசத்தியிருப்பார்.
ஜெய்பீம் படக்கதையின் வழக்கறிஞர் பாத்திர நாயகன், நீதிபதியாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற சந்துரு படக்கதைக்கு பெரிதும் உதவினார். மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இன்றும் சாட்சிகளாக நம்முன் உள்ளனர்.
வலுவான திரைக்கதை, காட்சி அமைப்பு, சூர்யாவின் உணர்ச்சிகர நடிப்பு பார்ப்போர் மனதில் அழுத்தத்தை உண்டு பண்ணியது. சூரரைப்போற்று படத்துக்கு 6 விருதுகள் கிடைத்தது. வரும் ஆண்டிலும் அவருக்கு ஜெய்பீம் அதே மரியாதையை பெற்றுத்தர வாய்ப்புண்டு
அதிகார வர்க்கம் அடக்குமுறையை கையிலெடுக்கும்போது பாதிக்கப்படும் மக்கள் மவுனமாகிவிடுகின்றனர். சட்டத்தின் துணையை நாடாத அளவுக்கு அது எட்டாக்கனியாக, வசதியுள்ளவர்கள் அணுகும் நிலையில் உள்ளது
இந்நேரத்தில் சட்டம் பயின்ற வழக்கறிஞர் இலவசமாக வழக்கை கையிலெடுத்து சாதிப்பது போன்ற நம்பிக்கையை படம் ஊட்டியது. அதே போல் ஹீரோயிசம் இல்லாமல் மக்கள் போராட்டம் மூலம் பிரச்சினை முடிவுக்கு வருவதை அழுத்தமாக சொல்லியது ஜெய்பீம்
ஜெய்பீம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. சூர்யா எனும் கலைஞனின் சமூக அக்கறையும், ஞானவேல் எனும் இயக்குநர் என படத்தை உருவாக்க ஒவ்வொருவரும் கொடுத்த பங்களிப்பு தமிழில் சமூக அக்கறையுள்ள படம் வெளி வர வாய்ப்பாக அமைந்தது
உரிய வாய்ப்பு கிடைத்தால் சமூகத்தின் கடைகோடியில் உள்ள மக்கள் கூட எதையும் சாதிக்க முடியும் என்பதை கடைசி காட்சியில் அருக்காணியின் மகள் சூர்யாவுடன் அமர்ந்து பேப்பர் படிப்பதுபோன்று காட்சி வைத்திருப்பதில் காணலாம்