Tap to Read ➤

ஜெர்சி படத்தில் நிஜ நாயகன் பிரவீன் தாம்பே

விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைப்பவர்கள், கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பது பிரவீன் தாம்பே வாழ்க்கை. அதை அழகாக படமாக்கி கௌன் ப்ரவீன் தாம்பே என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளனர்.
சாதனை செய்ய வயது ஒரு தடையல்ல என வாழும் உதாரணம் பிரவீன் தாம்பே
கிரிக்கெட் வரலாற்றில் பல உன்னதமான வீரர்கள் வந்துள்ளனர் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக அதில் ஒருவர் பிரவீன் தாம்பே
அவருடைய வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் ’கௌன் பிரவீன் தாம்பே’ ஓடிடி தளத்தில் Hot Star-ல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டை நேசிக்கும் ஒரு மனிதன் பல்வேறு வாழ்க்கை பிரச்சினைகளுக்கு இடையே எவ்வாறு தான் நினைத்த இலக்கை அடைகிறார் என்பது கதை. கதை அல்ல நிஜம்.
பிரவீன் தாம்பே விடாமுயற்சி உள்ள ஒரு மனிதர். திருமணம் ஆன பின்னும் கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கிறார்.
வேலை போய்விட்டது, ஆனாலும் இரவில் மதுபாரில் வேலை, பகலில் வேலை செய்துகொண்டே பகலில் கிரிக்கெட் பயிற்சி எடுக்கிறார்.
பல முயற்சிகள் எடுத்தும் ரஞ்சி அணியில் இடம் பெற முடியாமல் தவித்த தாம்பே தனது 34வது வயதில் ஐபிஎல் போட்டிக்கு தேர்வானார்.
பிரவீன் தாம்பே என்கிற சிறந்த கிரிக்கெட் வீரரை அடையாளம் கண்டு ஐபிஎல் அணியில் எடுத்தார் ராகுல் டிராவிட்.
ராகுல் டிராவிட் எண்ணம் சரிதான் என நிரூபித்தார் பிரவீன் தாம்பே. தொடர்ந்து 5 ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடினார்.
இதன் மூலம் மும்பை ரஞ்சி அணியிலும் அப்போது அவரது வயது நாற்பதுக்கு மேல். இதுதான் விடா முயற்சி.
2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார் தாம்பே தற்போது 51 வயதாகும் தாம்பே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சப்போர்ட் கோச் ஆக உள்ளார்.
தாம்பே தனது வயதை மீறி மகன் வயதுடைய கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட நேர்ந்தபோது விடாமுயற்சியுடன் விளையாடி ரஞ்சி வரை வந்தார்.
இதற்கு அவருக்கு பெரிதும் உதவியது கோச், அவரது நண்பர்கள் முக்கியமாக ராகுல் டிராவிட். மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் அழகாக படமாக்கியுள்ளார் இயக்குநர் ஜெய்ப்ரத் தேசாய்.
படம் முழுவதும் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞராக தாம்பேவாக வாழ்ந்துள்ளார் ஷ்ரேயாஸ் டால்பதே.
இதற்காக அவர் பயிற்சியும் எடுத்துள்ளார். படம் எந்தவித தடங்கலின்றி கலகலப்பாக நகர்கிறது.
தன்னுடைய அணியுடன் படத்தைப் பார்த்த பிரவீன் தாம்பே கண் கலங்கினார் அவர்களுக்கு அவருக்கு வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.