Tap to Read ➤

ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் எப்படி இருக்கு? மினி ரிவ்யூ

ஜுராசிக் பார்க் படம் பிரமிப்பை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துபோகும் அளவில் ஜுராசிக் வார்ல்ட் பட சீரிஸ்கள் உள்ளன. ஸ்பீல்பர்கே கைவிட்டு போய்விட்டார். இவர்கள் அதை காமெடியாக்குகிறார்கள் என்றுதான் என்னத்தோன்றுகிறது.
பாலிவுட் மட்டுமில்ல ஹாலிவுட் திரையுலகமும் நம்ம ஊர் படங்களை பக்காவா பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிசிடுச்சு போல, என்பது ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தை பார்க்கும் பலருக்கும் தோணுது.Start typing...
1993ம் ஆண்டு ஜுராசிக் பார்க் படத்தை உருவாக்கி பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன டைனோசரை கண் முன் கொண்டு வந்தார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
அவர் இயக்கிய அதே கதை மற்றும் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து கொஞ்சம் காப்பான் படத்தையும் மிக்ஸ் செய்து ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தை இயக்கி இருக்கிறார் கோலின் ட்ரிவாரோ.
டைனோசரை கடித்த கொசுவின் டிஎன்ஏவை வைத்து புதிதாக ஜுராசிக் பார்க் எனும் தீம் பார்க்கை உருவாக்கி டைனசர்களை காட்சிப்படுத்தி இருப்பார்கள் இதற்கு முந்தைய பாகங்களில்.
ஆனால், இந்தப்படத்தில் மற்ற மிருகங்களை போலவே டைனசர்களும் உலகத்தில் உலாவுவதும் அதனை வேட்டையாடுவதுமாக காட்டுவது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 5 வது பாகமான ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படத்தின் தொடர்ச்சி தான் இந்த 6வது பாகம் டொமினியன்.
மக்களோடு மக்களாக கலந்திருக்கும் டைனோசர்களை பணத்தாசை காரணமாக வேட்டையாடும் ஒரு கும்பல் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டிஎன்ஏவை கொண்டுள்ள ஒரு பெண்ணை கடத்த முயல்கிறது.
அவரை வைத்து ஆராய்ச்சி செய்ய துடிக்கின்றனர். இந்த பிரச்சனையை ஹீரோ கிறிஸ் பிராட் எப்படி சமாளித்தார் என்பது தான் படத்தின் கதை.
கடந்த பாகத்தில் ஹீரோ கிறிஸ் பிராட் குட்டி டைனசர்களை கும்கி யானையை போல தனது கன்ட்ரோலில் வைத்துக் கொண்டு கிளைமேக்ஸ் காட்சியில் பெரிய டைனோசர்களையும் அடக்குவார்.
அப்போதே, இது என்னடா கும்கி படத்தின் காப்பியா? என ரசிகர்கள் கலாய்த்தனர். இந்நிலையில், காப்பான் படத்தில் வருவது போன்று 6 ஆம் பாகத்தை எடுத்துள்ளனர்.
வெட்டிக்கிளிகளின் அட்டகாசம் மற்றும் இயற்கை விவசாயத்தை அவை அழித்து விடும் அதற்கு எதிராக டைனோசர்களை பயன்படுத்துவது என தலையையே சுற்ற வைத்து விட்டார் இயக்குநர்.
சாம் நெய்ல், லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்பிளம் என பழைய ஜுராசிக் வேர்ல்ட் நடிகர்களை கொண்டு வந்தது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் தான் என்று சொல்ல வேண்டும்.
மேலும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த சேஸிங் சீன் எக்ஸ்ட்ரார்டினரியாக உள்ளது. அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.
பழைய படத்தை லேசாக பட்டி டிங்கெரிங் செய்தது போல இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பது தான் மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. டைனசர்களை கொஞ்சமாவது மிரட்டலாக காட்டி இருக்கலாம்.
டைனோசர்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டிய உயிரினம் என்கிற எண்ணத்தை பாராட்டலாமே தவிர, ஒட்டுமொத்த படமாக எந்தவொரு பிரம்மிப்பையும் ஏற்படுத்தவில்லை.
குழந்தைகள் ரசிக்கும் பொம்மைக்காட்சிகள் போல் டைனோசர்களை காட்சிப்படுத்த நினைத்து கடைசியில் அதுவும் இல்லாமல் குழந்தைகள் கூட ரசிக்கும்படி இல்லை என்பதே உண்மை