Tap to Read ➤

கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்திய நவீன டெக்னாலஜி

இன்று பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் நடிப்பைத்தாண்டி திரைக்கு பின்னால் பல புது டெக்னாலஜிக்களை புகுத்தினார்.
Filmibeat Tamil
1981 ஆம் ஆண்டு தன்னுடைய 100 வது படமான ராஜபார்வை படத்தில் அனிமேஷன் டெக்னாலஜியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார் கமல்.
1985 ஆம் ஆண்டு மங்கம்மா சபதத்தில் ராஸ்டர் ஆல்கரிதம் என்று சொல்லப்படுகிற ஒரு கம்ப்யூட்டர் டெக்னாலஜியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
1986 ஆம் ஆண்டு கமலின் சொந்த தயாரிப்பான விக்ரமில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. இந்தப்படத்தில் கம்ப்யூட்டர் எப்படி இருக்கும் என்பதையும் கமல் காண்பித்தார்.
1990 ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜன் படத்தில் முதன் முதலில் லேப்டாப் எப்படி இருக்கும் என்பதை கமல் காண்பித்திருப்பார்.
அதே படத்தில் மார்பிங் டெக்னாலஜியை கமல் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நான்கு நடிகர்கள் இருக்க அனைவர் முகத்தையும் கமல் முகமாக மாற்றி காண்பித்திருப்பார்கள்.
1991 ஆம் ஆண்டு வெளிவந்த குணா படத்தில் தான் முதன் முதலில் ஸ்டடி கேமரா முறையை அறிமுகப்படுத்தினார். இது உடலில் கேமராவை கட்டிக்கொண்டு இயங்குவது. எந்த ஷேக்கிங்கும் வராது.
1992 ஆம் ஆண்டு வெளி வந்த தேவர் மகனில் முதன்முறையாக ஸ்க்ரீன்பிளே ரைட்டிங் சாஃப்ட் வேர் மூலமாக ஸ்க்ரீன்பிளே எழுதப்பட்டது. இப்படி எழுதி இயக்கப்பட்ட முதல் படம் தேவர் மகன்.
1994 ஆம் ஆண்டு ரிலீசான மகாநதி படத்தில் ஆவிட் எடிட்டிங் எனப்படும் புதிய முறையில் எடிட்டிங் செய்யப்படும் டெக்னாலஜியை கமல் அறிமுகப்படுத்தினார்.
1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தில் முதன் முதலில் டால்பி சவுண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2000 ஆம் ஆண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் லைவ் ரெக்கார்டிங் சிஸ்டம் மூலம் நேரடியாக ரெக்கார்டு செய்து ரிலீஸ் செய்யும் நியூரிண்டோம் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தினார் கமல்.
2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்திலும் இதே முறையை அறிமுகப்படுத்தினார் கமல். இந்தப்படம் கதாபாத்திரங்கள் அவரவர்கள் கோணத்தில் கதை சொல்லும் வித்தியாசமான படமாகும்.
2001 ஆ ஆண்டு ஆசியாவிலேயே முதன்முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமரா மூலம் படம் தயாரிக்கப்பட்ட படம் ஆளவந்தான் அதை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை மிக்கவர் கமல்.
2005 ஆம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் முதன் முறையாக இந்திய திரையுலகிலேயே டிஜிட்டல் முறையில் படமாக்கும் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியதும் கமல்தான்.
2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் முதன்முறையாக இந்திய சினிமாவிலேயே ஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியவர் கமல்.