Tap to Read ➤

விக்ரம் பட இயக்குனருக்கு கார், 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்

2022, ஜூன் 3ல் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குனர்களுக்கு கமல் ஹாசன் பரிசுகள் வழங்கியுள்ளார், இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.
2022, ஜூன் 03ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது, விக்ரம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில், கமல்ஹாசன் தானே தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம்.
இப்படம் வெளியாகி பட்டிதொட்டி என எல்லா இடங்களிலும் பிரமாண்ட ஹிட் அடித்து புகழ் பெற்றுள்ளது. ரிலீஸ் ஆன 4 நாட்களில் இப்படம் 200 கோடிகள் வரை உலகளவில் வசூல் சாதனை செய்துள்ளது, விக்ரம்.
நடிகர் கமல் ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம், விக்ரம். இப்படம் இவரது மார்க்கெட் மற்றும் இவரின் திரைப்பட சாதனைகளை முறியடித்து எட்டா உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
விக்ரம் படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கு படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் Apache RTR 160 cc பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரை கமல் பரிசளித்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் அடுத்த 2 வாரங்களுக்கு ஓடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தரம் வாய்ந்த படைப்பாக விக்ரம் வெளிவந்திருப்பதாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகதானாலும் இப்படம் பெரிய அளவில் வசூல் செய்ய வாய்ப்புள்ளது
விக்ரம் படத்தின் தகவல்கள்
தகவல்கள்