Tap to Read ➤

விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை அதிர வைத்த பிரபலங்கள்

மே 15ல் சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை அதிர வைத்த பிரபலங்களின் பேச்சுகள் பற்றிய விவரங்கள் இங்கு உள்ளன.
கொஞ்சம் லேட்டா சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா தெரிஞ்சுருச்சு. படத்துல சூர்யா சார் நடிச்சிருக்கார். நன்றி சூர்யா சார். ஏன் நன்றி சொல்றேன்னு படம் பார்த்தா உங்களுக்கு புரியும்!
- லோகேஷ் கனகராஜ்
"சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. நான் அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்" -கமல்ஹாசன்
நான் ஒரு வரி யோசிச்சாலும் அதுல கமல் சார் இருப்பார். அவர் தாக்கம் இல்லாம எழுதுறது ரொம்ப கஷ்டம். 'கே.ஜி.எஃப் 2'ல நெகட்டிவ் கிளைமாக்ஸ கொண்டடுறாங்க , அதெல்லாம் அப்பவே கமல் சார் 'குருதிப்புனல்', 'குணா', 'மகாநதி' ல பணித்தார். இவர் படத்தோட 20 வருஷத்துக்கு அப்புறம் வரப்போற படத்தை போட்டிக்கு விடலாம். அப்படிப்பட்டவர் அவர்.
- இயக்குனர் ரத்ன குமார்.
கமல் சார் டைரக்க்ஷன்ல நடிக்கணும்னு ஆசை!
- விஜய் சேதுபதி
பழைய 'விக்ரம்' அருமையான படம். மதுரையைக் கதைக்களமா வச்சு கமல் சாரோட ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ' விருமாண்டி' எனக்கு ரொம்ப பிடுச்ச படம். மிக விரைவில் அவருடன் இணையப்போகிறேன்!
- இயக்குனர் பா. ரஞ்சித்
கமழும் நானும் 50 வருடங்களாக நண்பர்கள். ரொம்ப சுறுசுறுப்பான மனிதர். வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம்னு எதைப்பத்தியும் கவலைப்படாம செம செம சுறுசுறுப்பா வேலை பார்க்கக்கூடியவர். அந்த விக்ரமுக்கும் இந்த விக்ரமுக்கும் ஒரு வெள்ள தாடி மட்டும் தான் வித்யாசம். மற்றபடி இன்னும் ஒண்ணுமே மாறல!
- சந்தான பாரதி
அரசியல் கட்சி தொடங்கி சிறப்பா செயல்பட்டு வரீங்க கமல் சார். ஆனா, ஒரு வேண்டுகோள். வருஷத்துக்கு ஒரு படமாச்சு பண்ணுங்க!
- உதயநிதி ஸ்டாலின்
டைம் மெஷின் இல்லாம எதிர்காலத்துக்கு கூட்டிட்டு போனவர் கமல் சார். நான் இயக்குனர் ஆனதுக்கு முக்கிய காரணம் அவர்தான். இந்த மேடையில் நிக்குறது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு!
- ரவிக்குமார் (இயக்குனர்)