Tap to Read ➤

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை & டிரைலர் வெளியீடு

இன்று (15-மே-2022) சென்னை நேரு மைதானத்தில் நடந்த கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை & டிரைலர் வெளியிட்டு விழா பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்துள்ளது.
கமல்ஹாசனின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் பிரம்மாண்டமாக விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இப்படத்தில் பத்தல பத்தல, போர்க்கண்ட சிங்கம், வேஸ்ட்டட், டைட்டில் ட்ராக், ஒன்ஸ் அப்பான் எ டைம் என 5 பாடல்கள் உள்ளன.
விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழாவை தொகுப்பாளினி (DD) திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கியுள்ளார்.
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒரு பெரிய தொகைக்கு விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது, அடுத்த வாரத்தில் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களின் வீடியோக்கள்
வீடியோ