Tap to Read ➤

விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரசியல் கலந்து கலக்கிய கமல்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விக்ரம் பட ஃபர்ஸ்ட் சிங்கள் கமல்ஹாசன் அவரே எழுதி பாடி வந்துள்ளது. பாட்டில் காரம் ஆங்காங்கே தெரிகிறது.
விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரசியல் கலந்து கலக்கிய கமல்
கமல் நடிப்பில் விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் ட்ரெய்லர்/ ஆடியோ லாஞ்ச் வரும் 15 ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் வெளியிடப்பட உள்ளது.
இந்தப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பது கூடுதல் சிறப்பு.
படம் வன்முறை நிறைந்த தாதா படமாகத்தான் இருக்கும் என தெரிகிறது. பழிவாங்கும் படலமும் வில்லன்களின் வித்யாசமான நடிப்பும் ரசிகர்களுக்கு தீனி போடும்.
இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் சொந்தக்குரலில் பாடிய ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
கமல் மீண்டும் இளமை துள்ளலுடன் நாக்கை துறுத்தி மெட்ராஸ் பாஷையில் அவரே எழுதி பாடியுள்ளார்.
பாடல் கிட்டத்தட்ட ராஜா கைய வச்சா ஸ்டைலிலும், ஆழ்வார்பேட்ட ஆண்டவா ஸ்டைலிலும் உள்ளது.
இசை அனிருத், சான்டி மாஸ்டர் கோரியாகிராப், அன்பறிவு ஸ்டண்ட் என பெரிய பட்டாளமே படத்தில் உள்ளது.
இந்தப்படத்தில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறிய ரோலில் வருகிறார்கள். இதற்காக சூர்யா எண்ணூரில் படபிடிப்பு தளத்துக்கு சென்றார்.
ஃபர்ஸ்ட் சிங்கிளில் காரம் தூக்கலாக உள்ளது, பாடலில் அரசியலை விமர்சிக்கும் வரிகளும் வைக்கப்பட்டுள்ளது. ”ஒன்றியத்தின் தப்பாலே ஒன்றும் இல்ல இப்பாலே, சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்க்டி தில்லாலே”ன்னு எழுதியுள்ளார்.
கமல் ஹாசன் இப்போதுள்ள வயதான தோற்றத்தில் ஆடும் நடனம் இன்னும் அவர் இளைஞர்தான் என காட்டுகிறது. நடனத்தில் சான்டி மாஸ்டரின் டச் தெரிகிறது.