Tap to Read ➤

அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறையை பேசிய கர்ணன்...ஓராண்டு நிறைவு

கர்ணன் படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. பெண்கள் கல்வி கற்க அடையும் சிரமம், சாதாரண சிறிய பிரச்சினைக்காக போராடும் கிராம மக்கள் மீதான போலீஸ் அடக்குமுறையை அழகாக சொன்னது கர்ணன் திரைப்படம்.
நடிகர் தனுஷ் அறிமுகமான படம் துள்ளுவதோ இளமை. அந்த நேரத்தில் இவரெல்லாம் நடிகரா என பேச்சு எழுந்தது.
என்னை பார்த்தவுடன் பிடிக்காது பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் என்று வசனம் கூட இதற்காக வைக்கப்பட்டது.
தனுஷை அறிமுகப்படுத்திய செல்வராகவனே அவருக்கான திருப்புமுனை படத்தை கொடுத்தார். புதுப்பேட்டை என்கிற அத்திரைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
தனுஷ் அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் அவரை திசை திருப்பியவர் வெற்றி மாறன் தான். பொல்லாதவன் படம் தனுஷுக்கு பெரிய வெற்றியைத்தந்தது.
ஆழமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கக்கூடியவர் என தனுஷ் அடுத்தடுத்து வந்த ஆடுகளம், வடச்சென்னை, மாரி, அசுரன் போன்ற படங்களில் நிருபித்தார்.
இதில் தனுஷுக்கு பெரிய அளவில் பெயர் வந்தது. இந்த நேரத்தில் பரியேறும் பெருமாள் மூலம் புகழ்பெற்றிருந்த மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை தந்தார்.
கடந்த ஆண்டு இதே நாளில் (ஏப்-9) கர்ணன் படம் வெளியானது. சாதாரண பேருந்து வசதி கோரும் கிராம மக்கள் மீதான போலீஸ் அடக்குமுறையை பதிவு செய்தது கர்ணன் படம். ஆனாலும் தனி நபர் சாகசமாக படம் முடிவடைந்தது ஒரு ஏமாற்றமே.
அடக்குமுறைக்கு எதிராக கொந்தளித்து எழும் கிராமத்து இளைஞன் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். அவரது மாமாவாக லால் சிறப்பாக நடித்திருந்தார்.
புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், மாரி, வடச்சென்னை, அசுரன், கர்ணன் என அடுத்தடுத்து முத்திரைப்பதித்து தனுஷ் தனக்கென இடத்தை பிடித்தார்.
கர்ணன் வெளியான ஓராண்டு இன்று. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி, வடிவேலை வைத்து மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.
கர்ணன் படம் இன்றும் கிராமங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளையும், உரிமைக்காக போராடினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறையையும் பதிவு செய்தது.
கிராமத்தில் பெண்கள் கல்விக்கற்க செல்லும்போது அடையும் சிரமங்களை அழகாக காட்சிப்படுத்தியது. இவைகள் அனைத்தும் நிஜத்தில் பல கிராமங்களில் நடந்தது என்பதை மறுக்க முடியாது.