Tap to Read ➤

தமிழ் திரையுலகின் ‘காதல் மன்னன்’ ஜெமினியின் நினைவு தினம் இன்று

எம்ஜிஆர், சிவாஜி உச்சத்தில் இருந்த காலத்தில் தனித்துவமான நடிப்பால் பெண்கள், இளைஞர்கள்ம் ரசிகர்பட்டாளத்தை வைத்திருந்தவர் ஜெமினி கணேசன். அவரது 17 வது நினைவு தினம் இன்று.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் ஜெமினி கணேசன்
எம்ஜிஆர், சிவாஜிக்கு முன் திரையுலகில் கதாநாயகனாக அடி எடுத்து வைத்தவர். 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி படத்தில் அறிமுகமானார். எம்ஜிஆர், சிவாஜிக்கு மாற்றாக தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.
எம்ஜிஆர், சிவாஜிக்கு மாற்றாக அனைத்து வேடங்களிலும், காதல் செய்யும் இளைஞர், முக்கோணக்காதல் என நடித்ததால் பெண் ரசிகைகள் கூட்டம் இவருக்கு அதிகம்.
கணேசன் என்கிற பெயரில் அறிமுகமானவர், ஜெமினி நிறுவனத்தில் காஸ்டிங் மேனேஜராக பணியாற்றியதால் ஜெமினி என்பதை முன்பெயராக வைத்து ஜெமினி கணேசன் என அழைக்கப்பட்டார்.
சிவாஜி கணேசனுடன் இவர் நடித்த பாசமலர், பார்த்தால் பசி தீரும், பாவமன்னிப்பு போன்ற பா வரிசைப் படங்களில் சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பார்.
எம்ஜிஆருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தார். பின்னர் ஏனோ இருவரும் நடிக்கவில்லை. முகராசி என்ற படத்தில் எம்ஜிஆரின் அண்ணனாக நடித்திருந்தார்.
தன்னுடன் நடித்த சாவித்திரியை 3 வது திருமணம் செய்துக்கொண்டார். சாவித்திரியுடன் ஜெமினி நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினியுடன் நடித்தாலும் அவர் அறிமுகமானது ஜெமினி கணேசனின் களத்தூர் கண்ணம்மா படத்தில் தான்.
புராணபடங்களில் நடித்துள்ள ஜெமினி, சிவாஜியுடன் வீரபாண்டிய கட்டபொம்மனில் வெள்ளையத்தேவனாக நடித்து புகழ் பெற்றார்.
பாலச்சந்தர் படங்களில், ஸ்ரீதர் படங்களில் நடித்து புகழ்பெற்றார் ஜெமினி. கல்யாணப்பரிசு, சாந்தி நிலையம், சுமைதாங்கி, இருகோடுகள், புன்னகை, நான் அவனில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஜெமினிக்காக பாடியவர்களில் 2 பாடகர்கள் அப்படியே பொருந்தினர், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ். ஸ்ரீதரின் சுமைத்தாங்கி படத்தில் மயக்கமா கலக்கமா பாடல் அன்றிலிருந்து இன்றுவரை தன்னம்பிக்கை ஊட்டும் பாடலாக அமைந்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன், ஜெமினி நடித்த களத்தூர் கண்ணாம்மாவில் அறிமுகமானார். ஜெமினியின் கடைசி காலத்தில் அவ்வை சண்முகியில் வித்யாசமான வேடத்தில் ஜெமினி நடித்தார்.
1920 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் தனது 85 ஆம் வயதில் காலமானார். தமிழ் திரையுலகில் ஜெமினிக்கு எப்போதும் சிறந்த இடம் உண்டு.