Tap to Read ➤

காத்துவாக்குல ரெண்டு காதல் ட்ரெய்லர் வெளியானது

விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா நடிக்கும் முக்கோண காதல் கதை #KRK காத்துவாக்குல ரெண்டு காதல் ஏப்.28 திரைக்கு வருகிறது. இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
Filmibeat Tamil
காத்துவாக்குல ரெண்டு காதல் ட்ரெய்லர் வெளியானது
விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் முக்கோண காதல் கதை காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஏப் 28 வெளியாகிறது.
இந்தப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். அவரது ரவுடி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பெண்களை விரும்பி அவர்களிடம் சிக்கி திணறும் கதை.
படத்தின் பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. அதில் ஒரு பப்பில் காதலன் ஸ்ரீ சாந்துடன் இருக்கும்போதே விஜய் சேதுபதியுடன் காதல் லுக் விட்டு பாடுவதுபோல் உள்ளது.
இந்தப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த் சமந்தாவின் காதலராக வந்து விஜய் சேதுபதியிடம் அடியும் வாங்குகிறார்.
ட்ரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும்போது நகைச்சுவை கலந்த முக்கோண காதல் கதை என்பது தெரிகிறது. நயன்தாராவை திருமணம் செய்து சமந்தாவை காதலிக்கும் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இருவருக்கும் இது தெரியவர ஒரு கட்டத்தில் இணைந்து பழகுவதுபோல் காட்சி அமைத்துள்ளனர்.
இதை பிரபு, லொல்லு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் பார்த்து ரசிப்பதாக காட்சி உள்ளது. விஜய் சேதுபதிக்கு ஆகாதவர்கள் அல்லது நயன்தாரா, சமந்தா சம்பந்தப்பட்டவர்களாக இருப்பது போல் உள்ளது.
படத்தில் விஜய் சேதுபதி இருவரிடமும் சிக்கிக் கொண்டு திணறும் பாத்திரம் அதை அவர் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக செய்வதுபோல் காட்சி உள்ளது.
பல இடங்களில் மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியை டைட்டானிக் காதல் கதை ரேஞ்சுக்கு கிண்டலடித்துள்ளனர்.
முக்கோண கதைகள் பல படங்களில் வந்தாலும் இது மூன்று முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதால் எந்த அளவு ரசிக்கப்படும் என்பது ஏப். 28 அன்று படம் ரிலீசாகும்போது தெரியும்.