Tap to Read ➤

கே.ஜி.எஃப். - 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ-1 வெளியானது

இந்திய அளவில் ரூ.1000 கோடி வசூலை வாரி குவிக்கும் கேஜிஎஃப்-2 படம் எடுக்கப்பட்ட காட்சிகளின் முதல் பாகத்தை படபிடிப்பு குழு வெளியிட்டுள்ளது. அந்தக்காட்சிகளின் தொகுப்பு உள்ளே.
கே.ஜி.எஃப். சாப்டர் 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேமரா, எடிட்டிங், வசனம், காட்சி அமைப்பு, இசை இதில் இந்தப்படம் தனி ரகம்.
யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேஜிஎஃப்-2 கடந்த 14 ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஆனது. ஒரே வாரத்தில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் ஆன நிலையில் தற்போது 1000 கோடி ரூபாய் என்கிற மைல்கல்லை எட்டியுள்ளது.
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கிளைமாக்ஸில் யாஷ் கொலை செய்து கேஜிஎஃப்-ஐ கைப்பற்றுவார். 2 ஆம் பாகத்தில் அவருக்கு எதிராக திரளும் எதிரிகளை வீழ்த்துவதே கதை.
கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் ராக்கிபாய் யாஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க ராக்கி பாய் யாஷை கொலை செய்ய ஒன்று கூடி சதி திட்டம் போடுவார்கள்.
மறுபுறம் பிரதமராக புதிதாக வரும் ரவீனா டாண்டனின் பகைக்கும் ஆளாவார். அதை சாதூர்யமாக முறியடிப்பார், ஆனாலும் பகை தொடரும்.
கேஜிஎஃப்-ன் முக்கிய வில்லன் ஆதிராவின் என்ட்ரியும், அதனால் யாஷ் குண்டடி படுவதும் முதல்பாதி என்றால் அதன் பின்னர் ஆதிராவை யாஷ் ஒரு வழிப்பண்ணுவது செம்ம காட்சி.
அதிலும் கதாநாயகியை கடத்தும் ஆட்களிடம் கார் சேஷிங் செய்யும் காட்சியில் கேமராவும், எடிட்டிங்கும் இசையும் நம்மை புல்லரிக்க வைத்துவிடும்.
யாஷ் வரும் சீன்களில் வரும் பிஜிஎம், அவர் பேசும் பஞ்ச் வசனங்கள், யாஷ் பற்றி வில்லன்கள் பேசும் வசனம், வில்லன் ஆதிராவின் என்ட்ரி அனைத்துமே நம்மை சீட்டு நுனியில் அமர வைக்கும் காட்சி ஆகும்.
பிரதமரை சந்திக்க யாஷ் செல்லும் காட்சி, அங்கு பேசும் வசனம். ஒரு தங்கக்கட்டிக்காக சிபிஐ ஆஃபீசை துவம்சம் செய்யும் காட்சிகள் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டவை ஆகும்.
இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிட்டு வருகிறது. முதல் வீடியோவை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கேமரா டிபார்ட்மென்ட்டின் பணிகள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவாளர் புவன் கவுடா மற்றும் அவரது உதவியாளர்கள் படப்பிடிப்பு குறித்த சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளனர்.
கேஜிஎஃப் காக போடப்பட்ட பிரம்மாண்ட் செட்டுகள், புழுதி பறக்கும் கேஜிஎஃப் தளம், கேமராக்கள் இயங்கும் விதம் என விதவிதமாக வீடியோவில் உள்ளது.
இறுதிகாட்சியில் கப்பலில் செல்லும் ராக்கிபாய் யாஷ் கடலில் போகும் காட்சிகள் படமாக்கப்பட்டதும் வெளியாகியுள்ளது.
இது தவிர பல்வேறு காட்சிகள் வருகின்றன. அவைகள் வரிசையாக
துப்பாக்கியுடன் சிபிஐ அலுவலகத்திற்கு ராக்கிபாய் வரும் கார் சீன் இந்த வேனில் தான் நவீன ரஷ்ய துப்பாக்கி இருக்கும்.
கேஜிஎஃப் பிரம்மாண்ட வாயிலின் முகப்பு காட்சி.
கேஜிஎஃப் உள்ளே துணை நடிகர்கள்
யாஷ் இடம்பெறும் காட்சி
டீமுடன் இயக்குநர் நீல் சீரியஸ் டிஸ்கசன்