Tap to Read ➤

கேஜிஎஃப்- 2 மினி ரிவ்யூ

கேஜிஎஃப் இரண்டாம் பாகம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகெங்கும் 10,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
இரண்டாம் பாக படங்களிலேயே சிறந்த படமாக கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. அதன் தமிழ் டப்பிங் சிறப்பாக உள்ளது.
முதல் பாகத்தில் கருடனை கொன்று கே ஜி எப்பை கைப்பற்றும் ராக்கி.அங்கிருக்கும் மக்களின் உதவியுடன் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார்.
ராக்கியின் இடத்தினை பிடிக்க பலரும் ஆசைப்பட , அதற்காக பல முக்கிய வில்லன்களை சந்திக்கிறார் அவர்களை சமாளித்து ராக்கி தனது சாம்ராஜ்யத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை
இயக்குநர் பிரசாந்த் நீல், யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் என அனைவரும் அசத்தி உள்ளனர். இண்டஸ்ட்ரி ஹிட் என ரசிகர்கள் பாராட்டி உள்ளர்.
முதல்பாகம் பார்த்தவர்களுக்கு இன்னும் நன்றாக அனுபவிக்கும் வகையில் படம் இருக்கிறது என்கின்றனர்.
முதல் பாகத்தில் அதீரா மற்றும் பிரதமர் ராமிகா சென் கதாபாத்திரங்களுக்கு லீடு கொடுத்திருந்த நிலையில், அந்த இருவரும் ராக்கி பாயை வீழ்த்த போராடும் முயற்சிகள் வென்றதா? இல்லையா? என்பது தான் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் கதை.
முதல் பாகத்தில் தனது ஆளுமையை அதிரடி ஸ்டண்டுகள் மற்றும் ஆக்‌ஷனில் காட்டிய ராக்கி பாய் இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கும் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளி உள்ளார்.
முதல் பாகத்தில் அதிகம் உழைத்து விட்டோம். இரண்டாம் பாகத்தில் லேசாக நடித்தால் போதும் என நடிக்காமல், இந்த பாகத்திலும் முழு உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார் நடிகர் யாஷ்.
பாலிவுட் விமர்சகர் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரே வரியில் கேஜிஎஃப் 2 படத்தை விமர்சிக்க வேண்டுமென்றால் ’பிளாக்பஸ்டர்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், கேஜிஎஃப் 2 படத்திற்கு 5க்கு 4.5 ஸ்டார்கள் கொடுத்துள்ளார்.
முதல் பாகத்தில் வில்லன் என்ட்ரி இடைவேளை வரை இருக்காது, 2- ஆம் பாகத்தில் கருடா இறந்த செய்தி அறிந்ததுமே மீண்டும் கேஜிஎஃப்பை அடைய வேண்டும் என்றும் ராக்கி பாயை துவம்சம் செய்ய வேண்டும் என்று அதீரா வரும் காட்சிகள் மிரட்டல். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சரியான என்ட்ரி சீன் கொடுத்துள்ளனர்.
உலகளவில் கடத்தல் மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ள கேங்ஸ்டர் கூட்டம் தங்க சுரங்கத்தை ஆக்கிரமித்துள்ளதை இரும்பு கரம் கொண்டு அடக்க நினைக்கும் பிரதமர் ராமிகா ரோலில் நடிகை ரவீணா டாண்டன் கச்சிதமாக செய்துள்ளார்.
ராக்கி பாய் யாஷுக்கும் அதீராவுக்கும் நடக்கும் போரில் அதீரா சஞ்சய்தத் ராக்கி பாயை சுட்டு வீழ்த்துவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், மீண்டும் ராக்கி பாய் மீண்டும் உயிருடன் வரும் காட்சி தியேட்டரில் ரசிகர்களால் ஆராவாரத்துடன் ரசிக்கப்படுகிறது.
கடைசியில் ராக்கி அதீராவை வதம் செய்தாரா? அல்லது ராமிகா சென் ராக்கியை என்ன செய்தார்? இருவரிடம் இருந்தும் ராக்கி பாய் தப்பித்தாரா? என்பது தான் மீதிக் கதை.
இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படத்தின் மையக் கதையையே இரண்டாம் பாதியில் வைத்து விட்டு முதல் பாதி முழுவதும் பில்டப் காட்சிகளாக எடுத்துள்ளார். இதனால் படம் மிரட்டலாக உள்ளது.
முதல் பாகத்தை போலவே அதே டார்க் மோடில் படத்தை ஒளிப்பதிவு செய்து புவன் கெளடா அசத்தி உள்ளார். ரவி பஸ்ரூரின் பிஜிஎம் இசை ராக்கி பாய், அதீரா மற்றும் ராமிகா சென் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேவையான மாஸ் எலிவேஷன் உடன் ஸ்கோர் செய்துள்ளது.
படத்தின் மைனஸ் முதல் பாகத்தை பார்க்காத ரசிகர்களுக்கு நிச்சயம் கதை தெளிவாக புரியாது. ஒவ்வொரு காட்சியும் ஓவர் பில்டப்பாக இருக்கே என்பது போல் இருக்கும். பாகுபலி 2ம் பாகத்தை தனியாக பார்த்தாலே ரசிகர்களுக்கு புரியும் படி ராஜமெளலி எடுத்திருப்பார். இங்கு அது மிஸ் ஆகிறது.
ஹீரோயின் ஸ்ரீனிதி ஷெட்டி போர்ஷன் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சுமார் ரகம் தான். கடைசியில் கொல்லப்படுகிறார்.
அதிகமான வயலென்ஸ் காட்சிகள், காமெடி குறைவு உள்ளிட்ட சிலவற்றை குறையாக சொல்ல முடியும்.
கேஜிஎஃப் சாப்டர்-2 டன் கேஜிஎஃப் சகாப்தம் முடிகிறதா? என்று பார்த்தால் அதுதான் இல்லை. கேஜிஎஃப் சாப்டர்-3க்கான விஷயத்தை கிளைமேக்ஸில் யார் பார்ப்பது போன்ற காட்சி செம ட்விஸ்ட்.
3 ஆம் பாகத்தில் மீண்டும் ராக்கி பாயின் ஆட்டம் எப்படி தொடரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது. KGF-2 தியேட்டரில் மட்டுமே பார்க்கவேண்டிய படம்.