Tap to Read ➤

காத்துவாக்குல ரெண்டு (ஓல்ட்) காதல் படங்கள்/ KRK concept old movies

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போன்ற பல திரைப்படங்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் காலத்திலேயே வந்துள்ளது.
காத்துவாக்குல ரெண்டு (ஓல்ட்) காதல் படங்கள்
காத்து வாக்குல ரெண்டு காதல் மட்டும் இருதலைக் காதலை சொல்ல வில்லை. இதற்கு முன்னர் பல படங்கள் சொல்லியுள்ளன.
இது முக்கோண காதல் படம் ஆகும். இப்படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரையும் காதலிக்கும் விஜய் சேதுபதி அவர்களிடம் சிக்கி தவிப்பதை நகைச்சுவையாக எடுத்துள்ளனர்.
இந்தப்படம் கதைக்களம் திரையுகிற்கு புதிதல்ல, இதற்கு முன்னர் பல படங்கள் வந்துள்ளன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, சிவக்குமார், ரஜினி, கமல், மோகன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
கதாநாயகியும் முக்கோண காதலில் சிக்கி தவிக்கும் படங்களும் வெளி வந்துள்ளன. அந்தக்கால தேவிகா தொடங்கி இடைக்கால தேவயானி வரை படங்கள் வந்துள்ளது
சிவாஜி நடித்த இருமலர்கள் படத்தில் காதலி பத்மினி பிரிய பின்னர் அத்தை மகள் கே.ஆர்.விஜயாவை மணந்தவர், காதலி திரும்ப வந்தவுடன் இருவருக்கும் இடையே சிக்கி தவிப்பார்.
தேனும் பாலும் படத்திலு இதேபோல் மனைவி பத்மினி காதலி சரோஜா தேவி இடையே மாட்டிக்கொண்டு நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு என சிவாஜி பாடுவார்.
இரு மனைவிகள் முதல் மனைவி கலெக்டர், இரண்டாவது மனைவி இல்லத்தரசி கணவனை தனக்கே சொந்தம் என புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் என பாடும் பாடல் அற்புதமாக இருக்கும்.
இதேபோல் புதிய பறவை படத்தில் ஒருபக்கம் காதலி சரோஜா தேவி அவரை கரம் பிடிக்க போகும்போது இறந்துபோன மனைவி சரோஜா தேவி உயிருடன் வந்து பார்த்த ஞாபகம் இல்லையோன்னு பாடுவார்.
எம்ஜிஆர் படத்தில் பல படங்களில் 2 பேர் எம்ஜிஆரை விரும்புவார்கள் ஆனால் எம்ஜிஆர் ஒருவரை மட்டுமே விரும்புவார். அடுத்தவரை தங்கச்சின்னு சொல்லிடுவார். தொழிலாளி தொடங்கி பல படங்களில் இதை பார்க்கலாம்.
நான் ஏன் பிறந்தேன் படத்தில் இதேப்போன்றதொரு வேடம் எம்ஜிஆருக்கு திருமணமாகி மனைவி கே.ஆர்.விஜயா இருந்தும் சொல்ல முடியாத நிலை, வேலைக்கொடுத்த காஞ்சனா விரும்புவார், கடைசியில் தங்கச்சிதான் முடிவு.
கண்ணன் என் காதலன் படத்தில் எம்ஜிஆரை விரும்பும் அத்தைப் பெண் வில்லியாக கடைசியில் மாறுவார். காதலி ஜெயலலிதாவை கரம் பிடிப்பார்.
உலகம் சுற்றும் வாலிபன் இன்னும் வித்தியாசம் தாய்லாந்து பெண் டூயட் பாடி (கனவில்தான்) முடிந்தப்பின் தங்கச்சின்னு சொல்லிவிடுவார். ஆனால் சந்திரகலாவுடன் தன்னை விரும்பிய லதாவையும் ஏற்றுக்கொள்வார்.
 ரஜினி நடித்த வீரா படத்திலும் சூழ்நிலை காரணமாக ரோஜாவை மணக்க இறந்துபோனதாக நினைத்த மனைவி உயிருடன் வர காமெடியாக கதை நகரும்.
பத்ரகாளி படத்தில் முதல் மனைவி குழந்தை இறந்ததால் மன நலன் பாதிக்கப்பட இரண்டாவது திருமணம் செய்த பின்னர் முதல் மனைவி நிலை சரியாக சிவகுமார் தவிக்கும் தவிப்பு நன்றாக இருக்கும்.
கமல்ஹாசன் நடித்த மீண்டும் கோகிலாவில் நாலணா வக்கீல் கமல் நடிகை கிளையண்ட் கிடைக்க மனைவி ஸ்ரீதேவியை மறந்து நடிகை தீபா பின்னால் சுற்றுவார்.
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் கிராமிய பெண் சுஹாசினியை மணந்து நடுத்தெருவில் விட்டுவிட்டு காதலி ராதாவை மணந்த மோகன் வீட்டில் வேலைக்காரியாக சுஹாசினி இருப்பதை அறிந்து தடுமாறுவார்.
ரெட்டைவால் குருவி எனும் படத்திலும் இதேப்போன்று ராதிகா, அர்ச்சனா இருவரையும் மணந்து சமாளிக்கும் பாத்திரம் மோகனுக்கு.
சிந்து பைரவி படத்தில் பிரபல பாடகர் தனது மனைவியை விட்டு சுஹாசினியை காதலிக்க அதனால் தொழிலை மறந்து மதுபோதைக்கு அடிமையாகி சீரழிவார்.
இது போன்று ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் நடப்பதுபோன்ற கதைகளும் உண்டு. அதில் ஒன்று நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா கணவர் நோயாளி முத்துராமன், முன்னாள் காதலன் மருத்துவர் கல்யாண் குமார் இடையே சிக்கி தவிப்பார்.
 மற்றொன்று தேவயானி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் நடித்த சொர்ணமுகி படத்தில் ஜெயிலுக்கு போன காதலன் திரும்பாததால் பிரகாஷ் ராஜை காதலித்து மணக்கும் நேரத்தில் பார்த்திபன் திரும்ப தேவயானி பார்த்திபனா, பிரகாஷ்ராஜா என தடுமாறுவார்.
இதுபோன்ற பல கதைகள் உணர்ச்சி பெருக்குடனும், நகைச்சுவையாகவும், எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இரண்டாம் வகை ஆகும்.